Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கால அட்டவணையில் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை நிரப்பி அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது இன்று முதல் தொடங்கி வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.
அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு அன்றைய தினம் சம வாய்ப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 11ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மாணவர்களின் விண்ணப்பத்தில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் AICTEயின் கல்விசார் அட்டவணைக்கு ஏற்ப அறிவிக்கப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் இன்று முதல் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment