ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சோதனை ஓட்டத்தை, தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது. பொதுவாக நாம் ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டும். ஆனால் தற்போது அதற்கு மாறாக வேறு ஒரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மாறாக தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுநர் சோதனை நடத்தவும், ஓட்டுநர் சான்றிதழ் வழங்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்
https://parivahan.gov.in என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு செல்லவும்.
இதில் முகப்புப் பக்கத்தில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் அப்ளை ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இப்போது விண்ணப்ப படிவம் திறக்கும், தேவைப்பட்டால் அச்சிடலாம்.
விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்புங்கள்
படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றவும்.
இப்போது கொடுக்கப்பட்ட வழிமுறைகளின்படி மீண்டும் நிரப்பவும்.
உங்கள் விருப்பத்தைப் பொறுத்து ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப செயல்முறையை முடித்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் உங்கள் ஓட்டுநர் திறமைக்கான ஆதாரத்தை வழங்குவதற்கும் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகவும்.
அனைத்து படிகளையும் சமர்பித்த பிறகு, உங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
லைசன்ஸ் கட்டணம்
கற்றல் உரிமம் (LLR) : ரூ 200
கற்றல் உரிமம் புதுப்பித்தல் (LLR Renewal) : ரூ 200
சர்வதேச உரிமம் : ரூ 1000
நிரந்தர உரிமம் : ரூ 200.
தனியார் பயிற்சி மையங்களுக்கான விதிகள்
ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்குவதற்கான தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களுக்கு, ஓட்டுநர் மையத்தில் கூடுதலாக 2 ஏக்கர் நிலம் தேவைப்படும். தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் உரிய சோதனை வசதிகள் இருக்க வேண்டும். பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
இதைத்தவிர பயிற்சியாளர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பயோமெட்ரிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் அடிப்படைகளை பயிற்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
பயிற்சி காலம்
இலகு ரக வாகனப் பயிற்சியை 4 வாரங்களில் (குறைந்தபட்சம் 29 மணிநேரம்) முடிக்க வேண்டும். பயிற்சியை குறைந்தது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். கோட்பாடு மற்றும் நடைமுறை. இதில், தியரி பிரிவு 8 மணி நேரமும், நடைமுறை 21 மணி நேரமும் இருக்க வேண்டும்.
கனரக மோட்டார் வாகனங்களுக்கு, 38 மணிநேர பயிற்சி இருக்கும். இதில் 8 மணிநேர கோட்பாட்டு கல்வி மற்றும் 31 மணிநேர நடைமுறை தயாரிப்பு ஆகியவை அடங்கும். இந்த பயிற்சி 6 வாரங்களுக்குள் முடிக்கப்படும்.
இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் உயர் தரத்தை பராமரிப்பதை உறுதி செய்வதே இந்த விதிகளின் நோக்கமாகும்.
No comments:
Post a Comment