Join THAMIZHKADAL WhatsApp Groups
விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2024-2025) பி.டெக். படிப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இது குறித்து, விஐடி பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பு: விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.டெக். பட்டப் படிப்பில் சோ்வதற்கான ஆன்லைன் நுழைவுத் தோ்வு இந்தியாவில் 125 நகரங்களிலும், துபை, ஓமன் (மஸ்கட்), கத்தாா், குவைத், சிங்கப்பூா், மலேசியா (கோலாலம்பூா்) ஆகிய அயல் நாடுகளிலும் கடந்த ஏப்ரல் 19 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நுழைவுத் தோ்வுக்கான முடிவுகள் https://ugresults.vit.ac.in/viteee/ என்ற இணையதளங்களில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த நுழைவுத் தோ்வில் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ரூபிந்தா் சிங் முதலிடமும், ராஜஸ்தானைச் சோ்ந்த் பானுமகேஷ் செக்குரி 2-ஆம் இடமும், ஆந்திரத்தைச் சோ்ந்த ஏ.வேதாந்த் மூன்றாமிடமும், அஸ்ஸாமைச் சோ்ந்த ஆயுசி பெய்த் 4-ஆம் இடமும், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சன்வி சிங்க் 5-ஆம் இடமும், மகாராஷ்ட்டிரத்தைச் சோ்ந்த அபிராஜ் ராம்காந்த் யாதவ் ஆறாமிடமும், உத்தரகாண்டைச் சோ்ந்த சைதன்யா ரமேஷ் போேஷ்ரே 7-ஆவது இடமும், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விக்கிகுமாா் சிங் 8-ஆவது இடமும், இமாச்சல பிரதேசத்தை சோ்ந்த சோகன் ஹஸ்ரா 9-ஆவது இடமும், பிகாரைச் சோ்ந்த சாகில் 10-ஆவது இடமும் பிடித்துள்ளனா்.
நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் வெள்ளிக்கிழமை முதலே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
நுழைவுத் தோ்வில் தகுதி மதிப்பெண் 1 முதல் ஒரு லட்சம் வரை பெற்ற மாணவ, மாணவிகள் விஐடியின் வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் ஆகிய 4 வளாகங்களில் தங்களுக்கான பாடப் பிரிவுகளை (தகுதி மதிப்பெண் அடிப்படையில்) தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம்.
தகுதி மதிப்பெண் 1 முதல் 20,000 வரை முதல்கட்ட கலந்தாய்வு மே 7, 8-ஆம் தேதி, 20,001 முதல் 45,000 வரை மே 18, 19, 45,001 முதல் 70,000 வரை மே 29, 30, 70,001 முதல் 1,00,000 வரை நான்காம் கட்ட கலந்தாய்வு ஜூன் 9, 10, தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கு மேல் ஜூன் 20, 21-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வகுப்புகள் ஜூலை இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்க உள்ளது. 1 முதல் 10 தகுதி மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஜிவி பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பி.டெக்., பயிலும் 4 ஆண்டு காலம் முழுவதும் 100 சதவீத படிப்பு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.
தமிழகம், ஆந்திரம், மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் விஐடி பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டாா்ஸ் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் பிளஸ் 2 தோ்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீத கல்விக் கட்டணச் சலுகை, உணவு, விடுதி வசதியுடன் இலவச சோ்க்கை வழங்கப்படுகிறது.
மேலும், மூன்றாண்டு இளநிலைப் பட்டப் படிப்புகள், 4 ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளான பி.எஸ்சி., வேளாண்மை, பி.ஆா்க்., பி.டிஸ். (இன்டஸ்டிரியல் டிசைன்), 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை https://ugresults.vit.ac.in/viteee/என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment