Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 30, 2024

கீழே குனிந்து நிமிர்ந்தால் திடீரென்று மயக்கம் வருகிறதா? அப்போ உங்களுக்கு இந்த நோய் உள்ளது என்று அர்த்தம்..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக வயதானவர்களுக்கு தான் இந்த மயக்கம் ஏற்படும். வயதானவர்கள் சிறிது தூரம் நடந்தாலே மயக்கமாக வருகிறது என்று கூறுவார்கள்.

அதனையும் தாண்டி மயக்கம் ஒரு பெரிய மலையில் இருந்து கீழே பார்த்தால் மயக்கம் வரும். மற்றொன்று சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் வரும். ஆனால் தற்போது பள்ளி படிக்கும் குழந்தைகள், இளைஞர்கள் என்று அனைவருக்கும் இந்த திடீர் மயக்கம் வருகிறது. சிலருக்கு கீழே குனிந்துவிட்டு நிமிர்ந்தால் இந்த மயக்கம் ஏற்படும். நிமிரும் போது எல்லாம் சுற்றுவது போல தெரியும். உங்களுக்கு என்ன நடக்கிறது என்றே ஒரு நிமிடம் தெரியாது. ஆனால் இந்த மயக்கம் குறைந்தது ஒரு 2 நிமிடம் வரை நீடிக்கும்.

ஏன் இவ்வாறு ஏற்படுகிறது. அ தற்கான காரணம் என்ன. இதற்கு தீர்வு என்ன என்பதை இந்த பதிவில் (adikkadi mayakkam vara karanam) பார்க்கலாம்.

Vertigo

இந்த மயக்கத்தை தான் நாம் ஆங்கிலத்தில் Vertigo என்று கூறுகிறோம். வெர்டிக்கோ என்றால் தலைச்சுற்றல் என்று அர்த்தம். இந்த தலைச்சுற்றல் ஏன் ஏற்படுகிறது என்றால் முதல் காரணம் பெரிஃபெரல் வெர்டிகோ மற்றும் சென்ட்ரல் வெர்டிகோ.

மயக்கம் வருவதற்கான காரணம்

பெரிஃபெரல் வெர்டிகோ என்பது காதுகளினால் ஏற்படும் பிரச்சனையால் மயக்கம் ஏற்படும். காதுகளில் பிரச்சனை ஏற்பட்டால் எப்படி மயக்கம் வரும் என்று பலரது கேள்வியாக இருக்கும். காதுகளினால் சில செய்திகள் மூளைக்கு செல்ல தடைப்படும் போது இந்த மயக்கம் ஏற்படுகிறது. அதற்கு சில காரணங்கள் நாம் படுத்துக்கொண்டே மொபைல் பார்க்கும் போது பெரிய தலையணையை வைத்துக்கொண்டு பார்ப்போம். அப்போது கழுத்து, காது பகுதிகளின் உள் சவ்வு போன்றவற்றில் அழுத்தம் ஏற்பட்டு இந்த பெரிஃபெரல் வெர்டிகோ வருவதற்கு காரணமாக அமைகிறது.

சென்ட்ரல் வெர்டிகோ என்பது பொதுவான உடம்பில் ஏற்பட்டுள்ள கட்டி, வேறு ஏதாவது காயம், வைரஸ் தொற்று, பக்கவாதத்தால் மூளை சற்று பாதிக்கப்படும் போது இந்த மயக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் தான் நாம் திடீரென்று நிலை தடுமாறி விழுவது, நம்மை சுற்றி வட்டமாக சுழலுவது பாேன்றவை தோன்றும்.

தடுக்கும் முறைகள்

காதுகளில் மேல் மடல், அதாவது தோடு அணிந்திருக்கும் பகுதியில் இருந்து மேல் பகுதி வரை கைவிரல்களால் மெதுவாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும்.

நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் பின்ட எண்ணெய்யை வாங்கி வந்து கழுத்து பகுதி போன்றவற்றில் தேய்த்து மசாஜ் செய்ய இந்த மயக்கம் குறையும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News