Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 26, 2024

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ் நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

அவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

கடந்தாண்டை போலவே மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்தப்பின்னர், ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிற 27ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு, தர வரிசையின் அடிப்படையில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

அதனைத் தாெடர்ந்து மே 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை, பாதுகாப்புபடை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலும், 2ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top