இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் இனி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன் பிறகு சில மாநில அரசுகளில் அரிசி மட்டுமின்றி பாமாயில், கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இனி அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக சில ரேஷன் கார்டுகளுக்கு அரிசி மற்றும் பருப்பு மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது புதிய உத்தரவின்படி பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்றவைகளும் இனி இலவசமாக கிடைக்கும். மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment