Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 20, 2024

"பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு" கருத்தரங்கம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கல்விச் செயல்பாட்டில் ஆர்வம் கொண்ட பெருந்தகையீர்!

வணக்கம்.

மே 27 (27.05.2024) திங்கட்கிழமை காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள பவளவிழா அரங்கில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பில் "பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு" என்ற பொருண்மையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் விழுமியங்கள்.

சகோதரத்துவத்தும் இல்லை என்றால் சமத்துவம் சாத்தியமில்லை, சமத்துவம் இல்லை என்றால் சுதந்திரம் அர்த்தமற்றதாகிவிடுகிறது.

சகோதரத்துவம் என்பது குறித்து எந்த புரிதலும் இல்லாமல் ஒருவர் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, உயர்கல்விக்கு வருகிறார், பின்னர் மிகப் பெரும் பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்புகளை பெறுகிறார் என்ற நிலை நீடிக்கிறது என்றால், பள்ளியில் காலைக் கூட்டத்தில் ஏற்கப்படும் தேசிய உறுதிமொழி ஏற்பு அர்த்தமற்ற சடங்காக நிகழ்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.‌

"இந்தியர்கள் யாருவரும் என் உடன் பிறந்தவர்கள்" என்ற‌ உறுதிமொழி படி அடுத்த தலைமுறை வாழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் பெரும் பங்கினை ஆற்ற வேண்டி உள்ளது.

"பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு" என்ற பொருண்மையில் நடைபெறும் கருத்தரங்கில் முன்வைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கவும், தங்களின் அமைப்பிற்குள் விவாதிக்கவும், இந்த விவாதத்தில் அரசை பங்கேற்கச் செய்யவும், பெற்றோர், மாணவர்கள் ஊரில் வசிக்கும் மக்கள் அனைவருடனும் தொடர்ந்து உரையாடல் நிகழ்த்தவும் மே 27 கருத்தரங்கம் பெரிதும் பயன்படும்.

பத்து நாட்களுக்கு முன்பாக கருத்தரங்க அழைப்பை பகிர்கிறோம்.

மே மாதம் 27, திங்கட்கிழமை அன்று "பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு" என்ற பொருண்மையில் நடக்கும் கருத்தரங்கில் அவசியம் பங்கேற்க வேண்டுமென்று தங்களின் நாட்குறிப்பில் குறித்துக் கொள்ளுங்கள்.

தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.‌

அவசியம் வாருங்கள்!

தோழமை அன்புடன்,

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News