Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 21, 2024

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி விவரம்: இணையதளத்தில் பதிவேற்றம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
2023-2024ம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கணக்கு விவர அறிக்கையை சந்தாதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2023- 2024ம் ஆண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்திர கணக்கு விவர அறிக்கை, தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலக வலைதளம் (https: // cag.gov.in / ae / tamil-nadu/en )-ல் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள், சந்தாதாரர்கள் கணக்கு விவர அறிக்கையை தங்கள் இணையதள பக்கத்தில் உள்நுழைந்து '' online services – want to know your GPF status '' மெனுவின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அலுவலக வலைதளத்தில் தங்களின் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News