Join THAMIZHKADAL WhatsApp Groups
கல்லூரிகளில் வணிகவியல், ஏஐ படிப்புகளில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானவுடன், திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
இதில், மாணவர்கள் வணிகவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence-AI) பட்டப்படிப்பு படிப்புகளில் சேர அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர்(சுயநிதி பிரிவு) அலெக்ஸாண்டர் பிரவீன் துரை கூறியது: சர்வதேச கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் ஒரு துறையில் சிறப்புத் திறன் கொண்ட பட்டதாரிகளை தேடுகின்றன. தற்போது உயர்கல்வி புதிய டிரெண்டை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது.
கர்நாடாக மாநிலத்தில் பல உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்டத்துறையில் குறிப்பிட்ட பிரிவை மட்டும் தேர்வு செய்து அதில் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றன. அதையே சர்வதேச நிறுவனங்கள் விரும்புகின்றன. கல்வி நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பாடத்திட்டங்களை வழங்கி வருகின்றன.
பி.காம் என்றால் மேலோட்டமாக படித்து வந்த நிலை மாறி, பி.காம் ஹானர்ஸ், பிசினஸ் அனலிஸ்டிக்ஸ் என்ற பல்வேறு புதிய படிப்புகள் வந்துவிட்டன. பி.காம் ஹானர்ஸ் படிப்பை இங்கிலாந்தில் உள்ள ஏசிசிஏவுடன்(அசோசியேஷன் ஆஃப் சார்ட்ட் சர்ட்டிபைட் அக்கவுண்ட்ஸ்) இணைந்து சில கல்லூரிகள் வழங்கி வருகின்றன என்றார்.
அதேபோல திருச்சியில் உள்ள பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் வணிகவியலை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. தவிர, அரசு கல்லூரிகளில் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பி.ஏ, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை தேர்வு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகளவு உள்ளது.
No comments:
Post a Comment