Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 31, 2024

Gpay -ல் புதிய அம்சம்; வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்தலாம், எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவில் இருக்கும் யுபிஐ செயலிகள் இப்போது உலக வர்த்தகத்தை நோக்கி நகர்ந்துவிட்டன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே செயலி இந்தியாவில் முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியாக உள்ளது. அந்த நிறுவனம் பேயில் புதியதாக மூன்று அம்சங்கள் வந்துள்ளன. இது பேமெண்ட்களை இன்னும் எளிதாக்க உள்ளது. அதில் ஒன்றுதான் 'Buy Now Pay later'. அதாவது பயனரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கடைக்காரரிடம் பணம் செலுத்தலாம். இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

கூகுள் கொடுக்கும் கடன்

நீங்கள் அவசரமாக கடைகளுக்கு சென்று பொருள் வாங்கிய பிறகு கூகுள் பே போன்ற செயலிகளில் பணம் செலுத்தும் நேரத்தில் தான் தெரியவரும் அக்கவுண்டில் பணம் இல்லை என்பது. இப்படியான நெருக்கடி சூழல்களை பலரும் எதிர்கொண்டிருக்கிறார்கள். இதற்கு இப்போது ஒரு தீர்வை கொண்டு வந்திருக்கிறது கூகுள் நிறுவனம். கூகுள் பே செயலியில் 'Buy Now Pay later' அம்சம் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் உங்களுக்கான குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று பின்னர் செலுத்த முடியும்.

கூகுளின் Autofill ஆப்சன்

Google Pay -ல் சேர்க்கப்பட்டிருக்கும் மற்றொரு அம்சம் என்னவென்றால், Autofill ஆப்சன் ஆகும். இது Chrome மற்றும் Android இல் இயக்கப்பட்டுள்ளது. அதாவது கைரேகை, முகம் ஸ்கேன் அல்லது பின்னைப் பயன்படுத்தி யூசரின் விவரங்களைத் தானாக நிரப்ப முடியும். இதற்குப் பிறகு நீங்கள் பணம் செலுத்துவது எளிதாக இருக்கும். இந்த அம்சம் இயக்கப்பட்டதும், உங்களிடம் கூடுதல் பாதுகாப்பு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

Google Wallet

வாலட் செயலியை கூகுள் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் டிஜிட்டல் வாலட் இது. இதில் நீங்கள் அனைத்து கார்டு விவரங்களையும் சேர்க்கலாம். ஒருமுறை இதைச் செய்தால், பிறகு அதிக டென்ஷன் ஆக வேண்டியதில்லை. இதை பேமெண்ட் ஆப்ஸுடன் இணைத்து, ஈஸியாக கட்டணங்களை செலுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News