Join THAMIZHKADAL WhatsApp Groups
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்திய பிறகே, முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற, நமது பேரியக்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது...
ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று (16.05.2024) மாலை தரவரிசைப் பட்டியலை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி உள்ளது.
அதனடிப்படையில், இன்று மாலைக்குள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி முன்னுரிமைப் பட்டியலைத் தயார் செய்யும் பொருட்டு, தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர் பட்டியல் கேட்கப்படும். மூத்த முதுகலை ஆசிரியர்கள் தங்கள் தகவல்களைத் தயாராக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன்...
சே.பிரபாகரன்
மாநிலத் தலைவர்,
TNPGTA.
No comments:
Post a Comment