Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 10, 2024

SSLC - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், விடைத்தாள் நகல் பெறுதல் மற்றும் கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


10.05.2024 அன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 13.05.2024 முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID , PASSWORD- ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ( Provisional Certificate ) பதிவிறக்கம் செய்து , அச்சான்றிதழ்களில் விவரங்களைச் சரிபார்த்து , தலைமையாசிரியரின் உள்ள கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் 13.05.2024 அன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம் அல்லது மாணவர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். .

தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , உரிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

DGE - SSLC Proceedings👇

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News