Join THAMIZHKADAL Telegram GroupJoin THAMIZHKADAL WhatsApp Groups
திரு.சுந்தர் பிச்சை
திருக்குறள்:
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள்:கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
பழமொழி :
The face is index of the mind.
அகத்தின் அழகு முகத்திலே தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.
*கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.
பொன்மொழி :
உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. --நெல்சன் மண்டேலா
பொது அறிவு :
1)தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
2) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?
மனோன்மணீயம் பெ. சுந்தரனார்
English words & meanings :
Appease- சமாதானம்,
Conciliate-சமரசம்
வேளாண்மையும் வாழ்வும்:
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்"
இந்த குறள் உழவின் மேன்மையை நமக்கு உணர்த்துகிறது. தினமும் ஒரு செய்தி நாம் வேளாண்மைக் குறித்து காண்போம்
ஜூன் - 10
சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்
சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார். சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். நீதிக்கதை
கண்ணன் மாடி குடியிருப்பில் வசித்து வந்தான். அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு மேல் வேறு வீடு இல்லை. ஆதலால் வெப்பம் கீழிறங்கியது. கண்ணனுக்கு அந்த வீட்டில் மிகவும் வியர்வை அதிகமாக இருந்தது. வேறு வீடு மாறலாம் என்றாலும் எங்கு சென்றாலும் இதே நிலைமைதான். கண்ணனின் பெற்றோர் கிராமத்தில் வசித்து வந்தனர். அவனுக்கு கிராமத்திற்கு சென்று வர வேண்டும் என்று தோன்றியதால் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். அப்போது அவன் பெற்றோரிடம் அவன் இருக்கும் வீட்டையும் வெயிலையும் பற்றி எடுத்துச் சொன்னான். கிராமத்தில் அவன் இருக்கும் வீட்டின் பின் புறத்தில் பெரிய தோப்பு இருந்தது. முழுவதும் தென்னை மரம் , பனை மரம் என்று வெயில் இருப்பதே தெரியாது.
எதனால் இந்த காலத்தில் வெப்பம் இவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்று யோசித்தான். பருவம் மாறியுள்ளதையும் சிந்தித்தான். நம் வீட்டில் இருப்பது போல் நகரங்களில் மரங்கள் அதிகமாக கிடையாது. அப்படியே வளர்ந்தாலும் அதை வெட்டி அங்கு ஒரு வீடு கட்டி விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனி மலைகள் உருக ஆரம்பித்து விட்டன. மழை பெய்வதும் குறைந்து விட்டது.
பருவத்தில் பெய்யும் மழையே அமிழ்தமாகும். அந்த காலத்தில் அந்த அமிழ்தத்தை நம் முன்னோர்கள் சுவைத்தனர். நாமும் இனி மரம் வளர்த்து உரிய காலத்தில் மழை பெறுவோம்.புவி வெப்பமாவதைக் குறைப்போம்!!
இன்றைய செய்திகள்
10.06.2024
* அரசுப் பணிக்கான குரூப் 4 தேர்வு நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. வினாத்தாளில் தமிழ் பகுதி தவிர்த்து இதர கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
* சைபர் கிரைம் விசாரணையில் கோவை மாநகர காவல் துறையினர் மாநிலத்தில் முதலிடம்.
* தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.
* பிரதமர் மோடி பதவியேற்பு விழா: 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வருகை.
* நார்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்.
* இந்தியாவின் கோலியும், பும்ராவும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவர்கள் என பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் தெரிவித்துள்ளார்.
Today's Headlines
* Group 4 exam for government jobs was held yesterday (June 9). The candidates said that apart from the Tamil language other questions were easy.
* Coimbatore police ranks first in our state in the cybercrime investigation.
* New Medical Insurance Scheme Guidelines for Tamil Nadu Government Employees and Pensioners were released.
* PM Modi Inauguration Ceremony: Chiefs of seven countries came to Delhi
* Norway Chess Series: 3rd place for Pragnananda.
* Pakistan all-rounder Fawad Alam said that India's Kohli and Bumrah are capable of changing the course of the game.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment