Join THAMIZHKADAL WhatsApp Groups
நம் பார்வையைப் பாதுகாக்க நம் கண்களைக் கவனத்தோடு காப்பது முக்கியம். உங்கள் கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்க இதோ சில வழிகள்:-
1. போதுமான முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:
வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, கனிம துத்தநாகத்துடன்(Zinc) உள்ள ஆன்டிஆக்ஸிடண்ஸை(Antioxidants) கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவைத்(macular degeneration) கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகள் (கேரட் மற்றும் ப்ரோக்கோலி போன்றவை), கீரைகள், ஸ்ட்ராபெர்ரிகள், சர்க்கரை வள்ளிக் கிழங்குகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் சால்மன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமில ஆதாரங்கள் கொண்ட பண்டங்களிலிருந்து பெறலாம்.
2. நாள்பட்ட பிரச்னைகளைக் கவனியுங்கள்:
உயர் ரத்த அழுத்தம் போன்ற சில நாள்பட்ட தாக்கங்களின் காரணமாகவும் உங்கள் பார்வை பாதிக்கப்படுகிறது. எனவே, சில பிரச்னைகளைத் தடுக்க முடியாவிட்டாலும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் மருந்துகளால் அவற்றை நிர்வகிக்க முடியும். உயர் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க, இதய ஆரோக்கியத்திற்குத் தொடர்பான உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
3. கண் ஓய்வு இடைவேளை:
நீங்கள் நீண்ட நேரம் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கும்படியான பணியில் இருந்தால், 20-20-20 விதியைப் பின்பற்றுங்கள்: ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், குறைந்தது 20 வினாடிகளுக்கு 20 அடி தொலைவில் உள்ள ஒன்றைப் பாருங்கள். இது கண் சோர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
4. புகைபிடிப்பதைத் தவிர்த்திடுங்கள்:
புகைபிடித்தல் கண்களுக்கு போகின்ற ரத்த நாளங்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. இந்தப் பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டால் உங்கள் ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்தலாம்.
5. உங்கள் கண்களை ஈரப்பதம் ஆக்குங்கள்:
உங்கள் கண்களுக்கும் நீரேற்றம் தேவை. அதனால் கண்களில் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும் வறட்சியைத் தடுக்கவும் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் பருகுங்கள் மற்றும் குளிர்ந்த சுத்தமான தண்ணீரால் கண்களை அவ்வப்போது கழுவிக்கொள்ளுங்கள்.
6. எந்நேரமும் கண்ணைச் சிமிட்டுங்கள்:
கண் சிமிட்டுதல் என்பது உங்கள் கண்களுக்கு ஒரு மினி ஸ்பா சிகிச்சை போன்றது. இது ஒரு பாதுகாப்பான கண்ணீர் நிறைந்த படலத்தைக் கண்பகுதி முழுவதும் பரப்புகிறது மற்றும் சோர்வை குறைக்கிறது. எனவே, அதை தினமும் பொறுமையாக செய்து, உங்கள் பார்வையைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள்.கொடிய நோய்களைத் தடுக்கும் கடுகு எண்ணெய்!
7. குடும்ப வரலாறு:
சில கண் நோய்கள் தலைமுறைகளாக தொடர்ந்துகொண்டே வரும். ஆகையால் அதைப் பற்றி உங்கள் குடும்பத்தில் பேசி தெரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருங்கள். கண் மருத்துவரை அணுகி உங்கள் கண்களை டெஸ்ட் செய்துகொள்வது மிக அவசியம். கண் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கு முன்பாகவே உங்களைத் தற்காத்துக்கொள்ள இது சிறந்த வழியாகும்.
8. நீல ஒளி பாதுகாப்பு:
நீல ஒளி வடிகட்டும் பொருளைப் பயன்படுத்தி அல்லது கணினி கண்ணாடிகளை அணிவதன் மூலம் டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளியேறும் நீல ஒளி கதிர்களிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்கலாம்.
9. சூடான ஒத்தடம் கொடுத்துக்கொள்ளுங்கள்:
உங்கள் கண்கள் சோர்வாகவோ அல்லது அழுத்தமாக உணர்ந்தால், ஒரு துணியில் ஊதிக்கொண்டு உங்கள் கண்களுக்கு ஒத்தடம் கொடுத்துக்கொள்ளுங்கள். இது தசைகளைத் தளர்த்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
10. நன்கு உறங்கவும்:
தரமான தூக்கம் உங்கள் கண்களுக்கு மிகச் சிறந்த மருந்து போன்றது. ஒவ்வொரு இரவும் 7-8 மணிநேரம் நிம்மதியான உறக்கத்தை நோக்கமாகக்கொள்ளுங்கள். இதைத் தொடர்ச்சியாக செய்துவந்தாலே கண் தொடர்பான எந்த ஒரு பிரச்னையும் நம்மை அண்டாது.
No comments:
Post a Comment