Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இனி ஆண்டுக்கு இரண்டு முறை அடிமிஷன் நடத்த உயர் கல்விக்கான ஆணையமான University Grants Commission அனுமதி வழங்கியுள்ளது.இதன் மூலம் இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைப் போன்றே இயங்கும் என்று யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.
2024-25 கல்வி ஆண்டு முதல் ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி-பிப்ரவரி என இரண்டு அட்மிஷன் சுழற்சிகள் நடைபெறும்.யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் இதுகுறித்து கூறுகையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை அட்மிஷன் வழங்க முடிந்தால், தேர்வு முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்படுதல், உடல்நலக் குறைபாடு அல்லது தனிப்பட்ட காரணங்களால் ஜூலை-ஆகஸ்ட் சேர்க்கையைத் தவறவிட்ட மாணவர்கள் போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜகதீஷ் குமார் பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரு வருடத்தில் இரண்டு முறை சேர்க்கை மாணவர்களின் படிப்பு மீதான ஊக்கத்தைத் தக்கவைக்க உதவும். ஏனென்றால் தற்போதைய முறையின் கீழ் ஒரு வருடத்தில் அட்மிஷனை தவறவிட்டால் ஒரு முழு ஆண்டும் காத்திருக்க வேண்டும்.
இந்த ஒரு அறிவிப்பு மூலம் மொத்த கதையும் மாற உள்ளது.கல்லூரிகளில் இரண்டு முறை சேர்க்கை நடைபெற்றால், நிறுவனங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை கேம்பஸ் இண்டர்வியூவ் நடத்த முடியும், இதன் மூலம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறினார்.
இரண்டு முறை சேர்க்கை மூலம் கல்லூரி நிறுவனங்கள் (HEIs) ஆசிரியர்கள், ஆய்வகங்கள், வகுப்பறைகள் மற்றும் சேவைகள், வளங்களை திறம்பட பயன்படுத்த முடியும். இதன் விளைவாக பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மேம்படும் என்று யுஜிசி தலைமை குறிப்பிட்டார்.உலகளவில் உள்ள பல்கலைக்கழகங்கள் நீண்ட காலமாக வருடத்திறகு இரண்டு முறை அட்மிஷன் முறையைக் கடைப்பிடித்து வருகின்றன.
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் இரண்டு முறை சேர்க்கை சுழற்சியைக் கடைப்பிடித்தால், சர்வதேச இணைப்பு மற்றும் student exchanges ஆகியவை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment