Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசானது பெண்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக பள்ளி முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் என்ற வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து விண்ணப்பங்களையும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் இம்முறை இவ்விண்ணப்பம் வழங்குவது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் எந்தெந்த விதிமுறைகள் இதில் உள்ளது உள்ளவை குறித்து தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.அதன்படி, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு 25 ஆயிரம் என்ற வீதம் இருவருக்கும் 50,000 வழங்கப்படும்.இந்த தொகையானது இருவருக்கும் 18 வயது பூர்த்தி அடையும் பட்சத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.அதுவரையில் அவர்களது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஒரு பெண் குழந்தை இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.அதேபோல முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து அதன் பிறகு இரட்டை குழந்தைகள் பெண்ணாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வரைமுறைகள்:
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பொழுது பெற்றோரில் ஒருவர் கட்டாயம் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் 70 ஆயிரத்திற்கும் குறைவானதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆண் வாரிசு இல்லை தத்தெடுக்க மாட்டோம் என்பதற்கான உறுதிமொழி சான்றும் இணைக்க வேண்டும்.
பெற்றோர்களின் திருமண பத்திரிக்கை உள்ளிட்டவைகளை சமர்ப்பித்து டெபாசிட் பத்திரம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகுதி அடிப்படையில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் உதவி தொகை கிடைக்கும்.
No comments:
Post a Comment