Sunday, June 23, 2024

8th pay Commission - ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீடு


எட்டாவது ஊதியக்குழு, ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.91. 2.28, 3.0 என பலவித கருத்துகள் இருந்தாலும், ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி (Fitment Factor) 1.91 க்கு குறையாது என பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில் ஊதியம் எப்படி நிர்ணயம் செய்யப்படும் மற்றும் ஊதியம் எவ்வளவு உயரும் என்பதை கீழ்க்கண்ட மாதிரி கணக்கீடு மூலம் அறியலாம்.

01.01.2026 அன்று ஒருவர் 100 பைசா அடிப்படை ஊதியம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தேதியில் அகவிலைப்படி சுமார் 66% ஆக இருக்கலாம்.

அதாவது 01.01.2024 ல் 50%, 01.07.2024 ல் 54%, 01.01.2025 ல் 58%, 01.07.2025 ல் 62%, 01.01.2026 ல் 66% என்ற வகையில் அகவிலைப்படி உயரக்கூடும்.

அப்படியென்றால் 01.01.2026 அன்று அடிப்படை ஊதியம் 100 பைசா பெறுபவர், 66% அகவிலைப்படியுடன் சேர்த்து 166 பைசா ஊதியம் பெறுவார்.

எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு 15% ஊதியம் கூடுதலாக தருவதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஊதிய நிர்ணயக் காரணி எப்படி அமையும் என்பதைக் காண்போம்.

ஊதிய நிர்ணயக் காரணி உருவாகும் விதம் :

01.01.2026 அன்று அடிப்படை ஊதியம்

100 பைசா

01.01.2026 அன்று அகவிலைப்படி (66%)

66 பைசா

மொத்த ஊதியம்

166 பைசா

– 1.66 ரூபாய்.

அதாவது, 166 பைசா

எட்டாவது ஊதியக்குழுவில் அரசு தரும் கூடுதல் ஊதியம் 15%

1.66 x 15% = 0.249

இதை அருகில் உள்ள இரண்டு இலக்க எண்ணுக்கு முழுமை படுத்தினால் 0.25 ஆகும். மொத்த ஊதியம் 1.66 ரூபாய் + 15% அரசு தரும் கூடுதல் ஊதியம் 0.25 = 1.91 ரூபாய். இந்த 1.91 தான் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதியம் நிர்ணயம் செய்ய பயன் படுத்தப்படும் ஊதிய நிர்ணய பெருக்குக் காரணி ஆகும்.
Fitment Factor – 1.91

இதன் அடிப்படையில் ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய ஒரு கணக்கீடு:

ஊதியக்குழு நடைமுறை படுத்தப்படும் முன்பு ஊதியம் : (01.01.2026 ல்)
அடிப்படை ஊதியம்
ரூ.90,000
66% அகவிலைப்படி
ரூ.59,400
மொத்த ஊதியம்
ரூ.1,49,400.

01.01.2026 அன்று நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் :
01.01.2026 அன்று அடிப்படை ஊதியம் - ரூ. 90,000
பெருக்குக்காரணி 1.91 மூலம், நிர்ணயம் செய்யப்படும்,

ஊதியம் (ரூ.90,000 × 1.91)
அகவிலைப்படி
மொத்த ஊதியம்
- ரூ.1,71,900
ரூ.0
- ரூ.1,71,900
(01.01.2026 முதல் 30.06.2026 வரை மட்டும் அகவிலைப்படி 0 என கணக்கிடப்படும்.)

வித்தியாசம்( 1,71,900 - 1,49,400) = ரூ.22,500.

(எட்டாவது ஊதியக்குழு நடைமுறை படுத்தப்பட்டதால் ரூ. 22,500 கூடுதலாக கிடைத்தது.)

அரசு தரும் 15% ஊதிய உயர்வு என்பது 01.01.2016 முதல் 31.12.2025 வரை அத்தியாவசிய நுகர்வு பொருள்கள் விலை உயர்வின் சராசரி ஆகும். அரசு தரும் ஊதிய உயர்வு, 15% முதல் 20% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை அரசு 20% ஊதிய உயர்வு அளித்தால், இன்னும் கூடுதல் தொகை ஊதியத்தில் கூடுதலாக கிடைக்கும்.

இது ஒரு மாதிரி கணக்கீடு தான். நிதிநிலை பொறுத்து அரசு தரும் ஊதிய உயர்வு தான் கிடைக்கும் என்றாலும், 15% ஐ விட குறைவாக இதற்கு முன் வழங்கியதில்லை என்பதால், மேற்கண்ட மாதிரி கணக்கீட்டின் அடிப்படையில் ஊதிய உயர்வு கண்டிப்பாக இருக்கும் என நம்பலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடைகைப்படி மற்றும் இதரப்படிகள், அடிப்படை ஊதியத்தில் 10%, 8%, 5% என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள், இதற்கென அமைக்கப்படும் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கும்.

ஆண்டு ஊதிய உயர்வு வழக்கம்போல் 3% ஊதியம் உயர்த்தி வழங்கப்படலாம். இதன் அடிப்படையில் Pay Matrix அட்டவணை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News