Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு இந்த கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு ஜூன் 14ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
2024 ஜனவரி மாதம் நிலவரப்படி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்றவர்களுக்கு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கலந்தாய்வு நடைபெறும் எனவும் இதில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment