Monday, June 17, 2024

வீட்டில் இருந்தபடி ரேஷன் கார்டுடன் ஆதார் விவரங்களை இணைக்கலாம்..!

வீட்டில் இருந்தபடி ஆன்லைன் போர்ட்டல் மூலம் ரேஷன் கார்டுடன் ஆதார் வியாபரங்களை இணைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு உடன் உங்கள் ஆதார் விபரங்களை இணைக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

- அதிகாரப்பூர்வ Public Distribution System (PDS) தளத்திற்கு செல்லவும்.

- செயலில் உள்ள ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான (Ration card Aadhaar Linking) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் ரேஷன் கார்டு எண்ணை (Ration card number) உள்ளிடவும். - அதனை தொடர்ந்து ஆதார் கார்டு எண்ணை (Aadhaar card number) உள்ளிடவும்.

- பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை (Mobile Number) உள்ளிட்டு சப்மிட் (Submit) கிளிக் செய்யவும்.

- உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP விபரங்களை உள்ளிடவும்.

- OTP விபரங்களை ஆதார் - ரேஷன் லிங்க் பக்கத்தில் (Aadhaar - Ration Link Page) உள்ளிடவும்.

- உங்கள் ஆதார் விபரங்கள் இணைப்பதற்கான வேலைகள் சரியாக சமர்ப்பிக்கப்படும்.

அவ்வளவு தான், உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டுவிடும். செப்டம்பர் 30, 2024 ஆம் தேதிக்கு முன்பாக உங்கள் ரேஷன் கார்டு விபரங்களை ஆதார் கார்டுடன் இணைத்து, ரேஷன் சேவையை தடையில்லாமல் பெற அறிவுரைக்கப்பட்டுள்ளது.
Dailyhunt

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News