Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 12, 2024

பணிநிரவல் விதித் தளர்வுக்கு பெரிதும் வரவேற்பும் - பாராட்டுதலும்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
*மாணவர்களின் கல்வி நலன் - ஆசிரியர்களின் நலன் - ஆசிரியர் சங்கங்களின் வேண்டுகோளினையும் மறுபரிசீலனை செய்து தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ள செயல்முறைக் கடிதம் - 07.06.2024

*பொது நோக்கர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டுதலையும், வரவேற்பினையும் பெற்றுள்ளது.

*01.08.2023 மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள்ளாக (within Block) மாறுதல் செய்வதற்கு அறிவுரைகள், அரசாணைகளையும் பின்பற்றி மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலையும் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் இதுவரையில் நடைபெற்ற பணி நிரவல் மாறுதலில் மனித நேய அடிப்படையில் விதிகள் தளர்வு செய்து வெளியிடப்பட்ட பணிநிரவல் கொள்கை மாறுதல்.

*அரசாணை எண் 243 தவிர்க்கப்பட்டுள்ளது.

*பதவி உயர்வுக்கு முன்னர் பணி நிரவல் செய்யப்படுகிறபோது ஒன்றியத்திற்குள்ளாக பணி நிரவல் விதித் தளர்வால் 450 பணியிடங்கள் மாணவர்களின் கல்வி நலனுக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன.

*மலை சுழற்சி மாறுதலுக்கு முன்னர் பணி நிரவல் செய்வதை தவிர்க்க வேண்டும் ஒப்புதல் அளித்துள்ளார்.

*இளையோர் விரும்பினால் மூத்தவர்களுக்கு தவிர்ப்பு வழங்கலாம்.

*மாறுதல் கொள்கையில் கடைபிடிக்கப்பட்டு வந்த விதித்தளர்வு கொள்கையினை பணிநிரவலிலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை பட்டியலிட்டு பயனடையச் செய்துள்ளார்.

*பணி மாறுதல் செய்கிற தேதியில் மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால் அவர்களை விட்டு விடலாம். மாவட்ட கல்வி அலுவலர்களை உடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

*விதிக்கும் - மனித நேயத்திற்கும் தொடர்பு இல்லாமல் போனாலும் தொடர்புப்படுத்தி வெளியிட்டுள்ளார்.

*தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தொடக்கக்கல்வி இயக்குனரின் நல்லெண்ண செயல்பாடுகளை எண்ணி பெரிதும் பாராட்டி மகிழ்கிறோம்.

*மாணவர்களின் கல்வி நலனை பாதுகாத்திட பணிநிரவல் கொள்கையில் மாற்றம் காண்போம்

தகவல் :

திரு. வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்,

தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News