Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று அல்சர் பாதிப்பால் அவதிப்பட்டு வருபவர்கள் ஏராளம்.குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
காலை உணவு தாமதல் அல்சர் ஏற்பட முக்கிய காரணமாகும்.இதனால் காலை நேரத்தில் வயிறு எரிச்சலுடன் மலம் கழிக்கும் நிலை ஏற்படும். அல்சர் ஏற்பட்டால் வயிற்றுக்குள் நெருப்பு வைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.
அல்சர் அறிகுறிகள்:
*குமட்டல்
*இரத்த வாந்தி
*ஏப்பம்
*வயிறு உப்பசம்
*கரு நிறத்தில் மலம் வெளியேறுதல்
*அடிவயிறு வலி
தேவையான பொருட்கள்:-
1)புழுங்கல் அரிசி
2)உப்பு
3)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி புழுங்கல் அரிசி போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.பிறகு இதை நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
அதன் பின்னர் அரைத்த அரிசியை கொதிக்கும் நீரில் கொட்டி கஞ்சி பதத்திற்கு கிண்டவும். இறுதியாக சிறிது உப்பு சேர்க்கவும்.இந்த கஞ்சியை தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சனை சரியாகும்.
அல்சரை குணமாக்கும் சில வீட்டு வைத்தியங்கள்:
தேவையான பொருட்கள்:-
1)துளசி
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கைப்பிடி அளவு துளசியை உரலில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
பின்னர் அதில் துளசி சாறு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பிலை
2)தயிர்
செய்முறை:-
ஒரு கொத்து வேப்பிலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு கப் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆப்பிள்
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு ஆப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் அல்சர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
No comments:
Post a Comment