Join THAMIZHKADAL WhatsApp Groups
அனைவரும் விரும்பி ருசித்துச் சாப்பிடக்கூடிய ஒரு காய்கறி தான் வெண்டைக்காய். குறிப்பாகக் காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளும் கூட வெண்டைக்காயை பார்த்தால் குஷி ஆகி விடுவார்கள்.
புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் 'A', 'B', 'C', தயாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் காணப்படுகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் வெண்டைக்காய் உதவுகிறது. வெண்டைக்காய் மட்டுமல்ல, வெண்டைக்காயின் நீரும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாறிவரும் பருவ காலத்தில், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு 1 முதல் 2 முறை வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பது நல்லது.
வெண்டைக்காய் தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுவதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துகிறது. எனவே கண்பார்வையை அதிகரிக்க வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடிக்கலாம்.
வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும், உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாறிவரும் பருவ காலத்தில், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு1 முதல்2 முறை வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பது நல்லது.வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துகிறது. எனவே கண்பார்வையை அதிகரிக்க வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடிக்கலாம்.
இரத்த சோகையை தடுக்கும் வெண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது. வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது.வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும், உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெண்டைக்காய் தண்ணீரை தயாரிக்க, 8 முதல் 10 வெண்டைக்காய்களை நடுவிலிருந்து வெட்டி அதை 2 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.இரவு முழுதும் நன்கு ஊறிய வெண்டைக்காய்களிலிருந்து மீதமுள்ள சாற்றை பிழிந்து ஊறவைத்தை தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.அவ்வளவு தான், வெண்டைக்காய் தண்ணீர் தயார்.
இந்த முறை தவிர வெண்டைக்காய் தண்ணீரை பின்வரும் முறைப்படி கொதிக்க வைத்தும் தயாரிக்கலாம்.
வெண்டைக்காய் தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும்?
உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வெண்டைக்காய் தண்ணீரை குடிக்கும்பொழுது அதன் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
No comments:
Post a Comment