Join THAMIZHKADAL WhatsApp Groups
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்கு கொய்யா மற்றும் அதன் இலைகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
கொய்யாவில் அதிகளவு சத்துள்ளகள் உள்ளன. ஆரஞ்சு பழத்தை விட இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அந்த வகையில் கொய்யாவில் வைட்டமின் பி2, ஈ, கே, நார்ச்சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி கொய்யா பல நோய்களைத் தடுக்கிறது. கொய்யா மட்டுமின்றி, கொய்யா இலைகள் மற்றும் கொய்யா தண்டு ஆகியவற்றில் கூட நீரிழிவு நோயை எதிர்க்கக் கூடிய வல்லமை உள்ளது. கொய்யாவின் இல்லைகளை எடுத்து அவற்றை நசுக்கி, விரும்பினால், அதிலிருந்து சாறு அல்லது கஷாயம் செய்து குடிக்கலாம். இந்த கஷாயத்தில் சிறிது இலவங்கப்பட்டை, வெந்தயம், ஜாமூன் விதைத் தூள் ஆகியவற்றையும் கலந்தும் குடிக்கலாம். இந்த ஆயுர்வேத கஷாயம் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
அதோபோல, கொய்யாவை நறுக்கி தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர, கொய்யாப்பழத்தை அதாவது பச்சையாகப் பழத்தை எடுத்து நசுக்கி 250 மில்லி தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் சர்க்கரையை வேகமாக குறைக்க உதவும். கொய்யாவில் உணவு நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. அதனுடன் இது சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. அதேபோல், கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. அதாவது சர்க்கரையின் அளவை ஓரளவுக்குத்தான் அதிகரிக்கிறது. இதனால் தான் இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
No comments:
Post a Comment