Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு சில காரணங்களால் ஜூன் பத்தாம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் அரசு அறிவித்த தேதியில்தான் பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் உத்தரவை மீறி முன்கூட்டியே மாணவர்களை பள்ளிக்கு வரச் சொன்னால் கடும் நடவடிக்கை பாயும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உரிய அனுமதி பெற்று தான் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும், மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment