Join THAMIZHKADAL WhatsApp Groups
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு, மார்ச் 2024 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ( Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியல் (Statement Of Marks) வழங்குதல் குறித்த விவரங்கள்
மார்ச் 2024 இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியலினை (Statement Of Marks) பெற்றுக்கொள்ளலாம்.
புதிய நடைமுறையில் (மொத்தம் 600 மதிப்பெண்கள்) தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் வழங்கும் முறை
மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும். மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Certificates) தனித்தனியே வழங்கப்படும்.
No comments:
Post a Comment