பால கங்காதர திலகர் |
திருக்குறள்:
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
கடப்பதற்கு தடைகளும், தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லையென்றால் வாழ்க்கை சலிப்பாக விடும்.------ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
கருங்குறுவை என்ற ரகம் தோல் வியாதி மற்றும் விஷக்கடி போன்றவற்றிக்கு ஏற்றது. கிச்சிலி சம்பா உடல் ஆற்றலுக்கும் சீரக சம்பா செரிமானத்திற்கு நல்லது என்பது போன்ற குறிப்புகளும் சித்தா மற்றும் ஆயுர்வேத நூல் குறிப்புகளில் உள்ளன.
ஜூலை 23
பால கங்காதர திலகர் அவர்களின் பிறந்தநாள்
நீதிக்கதை
சத்திரம்
ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல் தேசம் செல்ல நேரிட்டது.செல்லும் வழியில் சத்திரம் ஒன்று தென்பட்டது.மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என்று முடிவு எடுத்தார்.
அது அயல் நாட்டு மன்னனின் அரண்மனை ஆகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் இருக்கும் சத்திரம் என்று அவர் நினைத்தார்.
அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையை கட்டிவிட்டுப் பார்த்தார்.ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கு இருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்கு சென்றார். அது படுக்கையறை உண்ட மயக்கத்தில் படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.
வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்துவிட்டார். தன் உணவை உண்டுவிட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனை பார்த்ததும் சினம் கொண்டு பீர்பாலை தட்டி எழுப்பினார்."என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவை உண்டு என் படுக்கை அறையிலேயே படுத்திருக்கிறாயே" என்று அதட்டினார். அதற்கு பீர்பால் "ஓஹோ! இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்".
பீர்பாலின் பதிலை கேட்ட அரசர் கோபமுற்று "உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? அரண்மனைக்கும், தர்மசத்திரத்திற்கும் கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையா? என்று கடிந்தார் மன்னர் .
"மன்னர் அவர்களே! இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்மசத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை" என்றார் பீர்பால்
"ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார். நாளை போய்விடுவார். மறுநாள் வேறொருவர் வருவார்.பிறகு சென்று விடுவார்.இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல, நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே" என்றார் மன்னர்.
மன்னர் அவர்களே "உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்"?
"இதே அரண்மனையில் தான்".
"உமது தந்தையார்"?
"இதே அரண்மனையில் தான்".
"நாளை உங்களுக்கு பின் யார் தங்குவார்கள்"?
"இது என்ன கேள்வி? எனது மகன் தங்குவான்.
"ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை. எனவே, சத்திரத்திற்கு அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை" என்றார் பீர்பால்.
பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது வந்திருப்பவர் சாமானியர் இல்லை என்பதும் விளங்கியது.
" தாங்கள் யார்"? என்று மரியாதையுடன் வினவினார் அரசர்." என்னை பீர்பால் என்று அழைப்பார்கள்" என்று பதில் சொன்னார் பீர்பால்.
"அந்த மாமேதை நீங்கள் தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம் என்றார் அரசர்.
மேலும் சில நாட்கள் அந்த மன்னனின் அன்பு கட்டளையை ஏற்று, அவரின் விருந்தினராக தங்கி இருந்து விட்டு,பிறகு தன் செல்ல வேண்டிய இடத்திற்கு புறப்பட்டார் பீர்பால்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment