|
Holmes Comet - ஹோம்ஸ் வால் நட்சத்திரம் |
திருக்குறள்:
குறள் எண்:425
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.
பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து
விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
பழமொழி :
ஐந்தில் ல் வளையாதது ஐம்பதில் வளையுமா?
A young twig is easier twisted than an old tree
இரண்டொழுக்க பண்புகள் :
*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன்.
*மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.
பொன்மொழி :
தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்.----பிடல் காஸ்ட்ரோ
பொது அறிவு :
1. மிகப்பெரிய வால் நட்சத்திரம் எது?
விடை: ஹோம்ஸ்
2. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது?
விடை: ஏறக்குறைய 60 லட்சம்
English words & meanings :
Thorough-முழுமையான,
perfect-சரியான
வேளாண்மையும் வாழ்வும் :
மாப்பிள்ளை சம்பா
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது
நீதிக்கதை
பொறுமை
ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவமைத்து கொடுத்தார். அவருக்கு அந்த இயந்திரத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்வது என்று ஒரே குழப்பமாக இருந்தது.
அவரும்,அவரது மனைவியும் அந்த விலை நிர்ணயத்தை பற்றி விவாதித்தார்கள்.
எடிசனின் மனைவி " 20000 டாலர் கேளுங்கள்" என்றார்.எடிசன் "இந்த தொகை அதிகமாக இருந்தால் நமது இயந்திரத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது" என்று யோசித்தார்.
பணத்தை தருவதற்காக, மூத்த அதிகாரி ஒருவரை வெஸ்டன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. அதிகாரி எடிசனிடம், "இயந்திரம் என்ன விலை"? என்று கேட்டார்.
எடிசன் ஒன்றும் பேசாமல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தார். பொறுமை இழந்த அதிகாரி," எடிசன் சார், இதோ உங்களது இயந்திரத்திற்கான விலை நூறாயிரம் டாலர்கள் இதோ உங்கள் இயந்திரத்திற்கான முதல் தவணை தொகை இது" என்று காசோலையை எடிசனிடம், கொடுத்துவிட்டு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.
அவசரப்படாமல் பொறுமை காத்த எடிசனுக்கு நான்கு மடங்கு லாபம் ஏற்பட்டது. அவசரம் நமக்கு சிப்பிகளை தரலாம்.ஆனால் பொறுமையே நமக்கு முத்துக்களை தரும். பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு அதுவே நம் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைத் துடைக்கும் துடுப்பாய் பயன்படும்.
இன்றைய செய்திகள்
24.07.2024
🔖கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.
🔖ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 77 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: அனைத்து அருவிகளும் முழுமையாக மூழ்கின.
🔖வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
🔖மத்திய பட்ஜெட் 2024 எதிரொலி: தங்கம், வெள்ளி, செல்போன், காலணி விலை குறைகிறது.
🔖அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்: 7 மணி நேரத்தில் ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது.
🔖மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனையாக வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்து.
🔖மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி.
🔖ஒலிம்பிக் தொடருடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு - ஆண்டி முர்ரே அறிவிப்பு.
Today's Headlines
🔖Teachers should not be engaged in other work except teaching, school administration: High Court Madurai branch ordered.
🔖 Water flow into Okanagal Cauvery River is increased to 77,000 cubic feet : All waterfalls completely submerged.
🔖131 Tamil Nadu students who were stranded in Bangladesh have been safely brought to Chennai.
🔖Union Budget 2024: Gold, Silver, Cellphone, Footwear Prices Drop.
🔖 Kamala Harris is becoming the Democratic Party candidate in the US presidential election: 391 crores of donations were accumulated just in 7 hours.
🔖Sri Lankan player Samari Athapatthu made history by becoming the first female player to score a century in the history of Women's Asia Cup.
🔖Women's Asia Cup: A huge victory for Pakistan by defeating the UAE team.
🔖Andy Murray Announced his Tennis Retirement after Olympic Series.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment