Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 30, 2024

தெற்கு ரயில்வே வேலை வாய்ப்பு; தேர்வு கிடையாது; 2438 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தெற்கு ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 2438 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்திய அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, கோவை, திருச்சி மண்டலங்களில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2024

காலியிடங்களின் எண்ணிக்கை: 2438

இந்தப் பணியிடங்கள் சிக்னல் & டெலிகாம் ஒர்க்‌ஷாப், போத்தனூர், கோயம்புத்தூர், கேரேஜ் & வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர், ரயில்வே மருத்துவமனை, பெரம்பூர், திருவனந்தபுரம் பிரிவு, சேலம் கோட்டம், பாலக்காடு பிரிவு, எலக்ட்ரிக் ஒர்க் ஷாப், சென்னை கோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிரப்பப்படுகிறது.

பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கார்பெண்டர், டீசல் மெக்கானிக், டர்னர், மெசினிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MLT பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை; ரூ. 6000 - 7000

வயது தகுதி: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.08.2024

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. ஆனால் SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News