ஜிம் கார்பெட் |
திருக்குறள்:
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
"வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை, வேலையை விரும்பிச் செய்பவன் அரசன். "-----ஓஷோ
பொது அறிவு :
1.பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இதற்கு இப்பெயர் வரக் காரணம் பண்டையக் காலத்திலிருந்து இந்த அரிசியில் செய்த உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.
ஜூலை 25
ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்தநாள்
நீதிக்கதை
புதையல் ரகசியம்
ஒரு ஊரில் ராஜன் என்ற பணக்காரர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். முதுமை பருவத்தை அடைந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நான்கு பேரும் ஒற்றுமையாகவும், தந்தையிடம் பாசத்துடனும் இருந்தார்கள்.
திடீரென்று ஒரு நாள் ராஜனுக்கு உடல்நிலை பாதித்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். இருப்பினும் அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் நலிந்து வந்தது. நான்கு மகன்களும் தந்தைக்கு அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டனர்.
அவர்களிடம் ராஜன்,"என் அருமை மகன்களே! எனக்கும் வயதாகி விட்டது. உடல்நிலை மோசமாகி கொண்டே வருகிறது. நான் படுத்து இருக்கும் இந்த கட்டிலின் கால்களை பார்த்துக் கொள்ளுங்கள்.
முதலாவது கால் மூத்தவனுக்கு, இரண்டாவது கால் இரண்டாவது மகனுக்கு, மூன்றாவது கால் அடுத்த மகனுக்கும், நான்காவது நான்காவது கால் கடைசி மகனுக்கும் சொந்தமானது.
என்னுடைய மரணத்திற்கு பின்பு நான் கூறியபடி கட்டில் கால்களுக்கு கீழே இருக்கும் புதையலை எடுத்து நீங்கள் நான்கு பேரும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்றார்.
சில தினங்களில் ராஜனும் மறைந்தார். தந்தையருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நான்கு மகன்களும் செய்தனர். பின்னர் தந்தை கூறியபடி கட்டில் கால்களுக்கு கீழே புதையலை தோண்டினார்கள். தந்தையார் கூறியபடி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்டபடி இருந்த பானைகளை எடுத்துக் கொண்டார்கள்.
மூத்த மகனின் பானையில் முழுவதும் மண் இருந்தது. அடுத்த மகனின் பானையில் உமி இருந்தது.மூன்றாவது மகன் எடுத்த பானையில் பொன் துகள்கள் இருந்தன. கடைசி மகனின் பானையில் சாம்பல் நிரம்பி இருந்தது.
நான்கு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை. பானைக்குள் இந்த பொருள்களை வைத்தது ஏன்? இதை வைத்து என்ன செய்வது? என்று குழம்பிப் போனார்கள்.
எனவே தங்கள் ஊரில் இருந்த மரியாதை ராமனிடம் சென்று கேட்டார்கள். மரியாதை ராமனும் நான்கு பானைகளையும் உற்றுப் பார்த்தார். பின்பு யோசித்தார். தீர்வை கூறினார்.
நான்கு பேரையும் கூப்பிட்டார். "உங்கள் தந்தையார் புத்திசாலித்தனமாக தான் செய்திருக்கிறார். மண்ணைப் பெற்ற மூத்த மகன் தந்தையாரின் நிலங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உமியைப் பெற்ற இரண்டாவது மகன் தானியங்களுக்கு சொந்தக்காரர். பொன் துகளை பெற்றவர் நகைகளை சொந்தமாக்கி கொள்ள வேண்டும். சாம்பலைப் பெற்றவர் ஆடு மாடுகளை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் இப்படி ஒரு திட்டத்தில் தான் உங்கள் தந்தையார் சொல்லியிருக்கிறார் அதன்படி பிரித்துக் கொண்டு ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறினார் மரியாதை ராமன்.
நான்கு சகோதரர்களும் மரியாதை ராமனுக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment