பொன்மொழி :
"வெற்றியாளர் ஒரு போதும் இழப்பதில்லை, ஒன்று வெல்கிறார்கள் அல்லது கற்கிறார்கள்" ----மகாத்மா காந்தி
பொது அறிவு :
1.இருமுறை நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி யார்?
விடை: மேரிகியூரி
2. 15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர் யார்?
விடை: 14-ம் லூயி
English words & meanings :
prohibit-தடை,
resist-தடுப்பு
வேளாண்மையும் வாழ்வும் :
பூங்கார் கைகுத்தல் அரிசி:
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய வகைகளில் ஒன்று, இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும்
ஜூலை 26
ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களின் பிறந்தநாள்
ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.
நீதிக்கதை
மனிதர்கள் பலவிதம்
ஒரு இளைஞன் விரக்தியுடன் குருவின் முன்னால் போய் நின்று "குருவே! இந்த உலகத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார்.
குரு "ஏன் என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.
"நான் எது செய்தாலும் அது மற்றவர்களுக்கு பிடிப்பதில்லை நான் நல்லதே செய்தாலும் மற்றவர்கள் என்னை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள்.
எனக்கு நேரமே சரியில்லை. என்ன செய்வதென்றே தெரிய வில்லை. எனக்கு எப்பொழுது தான் நல்ல நேரம் வரும் என்று பார்த்து சொல்லுங்கள் குருவே", என்று அவரை வணங்கி நின்றான்.
பக்கத்தில் இருந்த தன் சிஷ்யனை அழைத்தார் குரு.பின்பு அந்த இளைஞனை பார்த்து உனக்கு "பிடித்த பழம் எது? பிடிக்காத பழம் எது?" என்று கேட்டார்.
"எனக்கு பிடித்த பழம் மாம்பழம்.
தினமும் சாப்பிட கொடுத்தாலும் சாப்பிடுவேன். எனக்கு பிடிக்காத பழம் வாழைப்பழம்.கோடி ரூபாய் கொடுத்தால் கூட ஒரு பழத்தை கூட என்னால் சாப்பிட இயலாது", என்று கூறினார்
குரு சிஷ்யனிடம் "உனக்கு பிடித்த பழம் எது? பிடிக்காத பழம் எது?" என்று கேட்டார். அதற்கு சிஷ்யன் "எனக்கு பிடித்த பழம் வாழைப்பழம் எனக்கு பிடிக்காத பழம் மாம்பழம்" என்று கூறினார்.
குரு இளைஞரை பார்த்து "இதிலிருந்து ஏதாவது உனக்கு புரிகிறதா?" என்று கேட்டார். இளைஞனோ, "எனக்கு எதுவும் புரியவில்லை"என்று கூறினார். குரு சிஷ்யனை பார்த்து "உனக்கு புரிந்ததை கூறு" என்று கூறினார்
சிஷ்யனும் குருவைப் பார்த்து, "எனக்கு பிடித்த பழம் அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடித்த பழம் எனக்கு பிடிக்காது. அவர் என்னை மகிழ்விப்பதாக எண்ணிக் கொண்டு மாங்கனியை என்னிடம் கொடுத்தால் அது எனக்கு வெறுப்பாகவே தோன்றும்" என்று கூறினார்.
குரு இளைஞரை பார்த்து "இதுதான் உனது பிரச்சனை. உனக்குப் பிடித்த பொருளோ, முடிவோ,விஷயங்களோ மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விருப்பம் வெறுப்பும், நல்லதும் கெட்டதும் எல்லோருக்கும் ஒன்று போலவே இருப்பதில்லை".
"ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமான குணங்கள் உண்டு. நமது பிறருக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்கிறோம் நீ எதையும் உனது கோணத்திலிருந்து பார்க்கும் அறிவை மட்டுமே பெற்று இருக்கிறாய்".
"எப்போதும் மற்றவர் கோணத்தில் இருந்து பார்த்து அதன்படி நடந்து கொண்டால் மட்டுமே நம்மை யாரும் வெறுக்க மாட்டார்கள்" என்று அறிவுரை கூறி இளைஞரை அனுப்பி வைத்தார் குரு.
இன்றைய செய்திகள்
26.07.2024
🧩தமிழகத்தில் புதிதாக 2.80 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்: அடுத்த மாதம் விநியோகிக்க அரசு திட்டம்.
🧩தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
🧩புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
🧩மேகதாது திட்டத்துக்காக கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் இதுவரை வழங்கவில்லை என்று மத்திய ஜல்சக்தித் துறை தெரிவித்துள்ளது.
🧩கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
🧩பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில்இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
🧩பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று சென் நதியில் வித்தியாசமான முறையில் நடக்க உள்ளது.
🧩பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து: வெற்றியுடன் தொடங்கிய ஸ்பெயின் அணி.
🧩டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: ரோகித், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய ஹாரி புரூக்.
Today's Headlines
🧩New Smart ration cards are issued to 2.80 lakh people in Tamil Nadu: Govt planned to distribute them next month.
🧩 Public Welfare Minister M. Subramanian has said that no one has been affected by the Nipah virus in Tamil Nadu.
🧩Sudhu coral beads have been found in the 2nd phase of excavation at Porpanaikottai in Pudukottai district.
🧩The Central Department of Hydropower has said that no permission has been given to the Karnataka government for the Meghadatu project.
🧩The Supreme Court has ruled that state governments have the power to levy taxes on mineral resources.
🧩A study conducted by Chinese and Belgian scientists has revealed that there is a possibility of diamonds in the nearest planet Mercury.
🧩The opening ceremony of the Paris Olympics will take place today on the river Seine in a different way.
🧩 PARIS OLYMPIC FOOTBALL: Spain starts it's game with a win.
🧩Test batsmen rankings: Rohit and Babar Azam were pushed behind by Harry Brook.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment