பிஎஸ்என்எல் தற்போது சிறப்பு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில் தற்போது திடீரென வெறும் 797 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 300 நாட்கள் வேலிடிட்டி என்ற புதிய பிளானை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர்டெல் போன்ற நிறுவனங்களில் ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் சுமார் 3000 ரூபாய் வரை இருக்கும் நிலையில் பிஎஸ்என்எல் 300 நாட்கள் வேலிடிட்டிக்கு வெறும் 799 ரூபாய் மட்டுமே வசூல் செய்வதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் படி பயனாளிகள் அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் அழைப்புகளை அனுபவிக்க முடியும் என்றும் இன்கம்மிங் மட்டுமே பயன்படுத்தும் பலருக்கு இந்த திட்டம் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த பட்சம் 200 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 10 மாதத்துக்கு 2000 ரூபாய் ஆகும் என்ற நிலையில் வெறும் 797 என்ற வசதியில் இந்த ரீசார்ஜ் பிளானை பெற்றுக் கொண்டால் பலருக்கு பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விரைவில் 5ஜி தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டு வர இருக்கும் நிலையில் தற்போது 4ஜி தொழில்நுட்பம் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. எனவே இந்த திட்டத்தில் அதிக வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment