Monday, July 29, 2024

வருமான வரி 'ரீஃபண்ட்' எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறிவது எப்படி?

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூலை 31-ஆம் தேதி தான் கடைசிநாள். அதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு, அதனை சரிபார்ப்பதும் (verify அல்லது e-verify)செய்வதும் அவசியம். இதைச் செய்ய தவறினால், வருமான வரி கணக்கு தாக்கல் தோல்வியில் முடிந்துவிடும்.

இந்த செயல் முறையில், நீங்கள் 2023-24ஆம் நிதியாண்டில் கூடுதலாக செலுத்திய வருமான வரியை திரும்பப் பெறலாம்.

டிடிஎஸ் (Tax Deducted at Source) அல்லது டிசிஎஸ் (Tax collected at source) அல்லது சுய மதிப்பீட்டு வரி போன்ற வகைகளில் நாம் செலுத்தும் கூடுதல் தொகைகளை வருமான வரித்துறை கணக்கிடும்.

வருமான வரி மதிப்பீட்டின் போது சமர்ப்பித்த கழிவுகள் மற்றும் விலக்குகள் அடிப்படையிலேயே வரி கணக்கிடப்படுகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு அதனை சரிபார்த்த (verify அல்லது e-verify) பிறகே, நீங்கள் கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறும் (ரீஃபண்ட்) செயல்முறை தொடங்கும்.

வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில், வரி செலுத்துவோரின் கணக்கில் 4 முதல் 5 வாரங்களுக்குள் ரீஃபண்ட் தொகை செலுத்தப்பட்டு விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை ரீஃபண்ட் தொகை மேற்கூறப்பட்ட காலத்திற்குள் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனில், வருமா வரி கணக்கு தாக்கலில் (ITR) ஏதேனும் தவறு இருக்கிறதா என்று நீங்கள் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

வருமான வரித்துறையிடம் இருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு(இ-மெயில்) ஏதேனும் தகவல் வந்துள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

eFiling இணையதளத்தில் ரீஃபண்ட் செயல்முறை ஸ்டேட்டஸை நீங்கள் சரிபார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரீஃபண்ட் ஸ்டேட்டஸில் சரிபார்க்க வேண்டியவைசரியான (Valid) பயனர் முகவரி (User ID) மற்றும் கடவுச்சொல் (Password)
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பான் (PAN) எண். (ஆதார் எண் அல்லது பான் எண்ணை வைத்து லாக்-இன் செய்து கொள்ளலாம்)
ரீஃபண்ட் பெறுவதற்கான விண்ணப்பம் தாக்கலானதை உறுதி செய்தல்.
www.incometax.gov.in

ரீஃபண்ட் ஸ்டேட்டஸ் சரிபார்ப்பது எப்படி?இ-ஃபைலிங் இணையதளத்தில் லாக்-இன் செய்யவும்
உங்கள் பயனர் முகவரி User ID) மற்றும் கடவுச்சொல்லை (Password) உள்ளிடவும்
உங்கள் ஆதார் எண் அல்லது பான் எண்ணை பயனர் முகவரியாக பயன்படுத்தலாம்.
www.incometax.gov.inஒருவேளை யாரேனும் பயனர் அவர்களது பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை எனில், ஒரு பாப்-அப் தகவல் வரும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை எனில், உங்கள் பான் எண் செயலற்றுப் போகும்.
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க, 'Link Now' என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஏற்கனவே இணைந்திருந்தால், நீங்கள் மீண்டும் இணைக்கத் தேவையில்லை. நீங்கள் நேரடியாக 'Continue' பொத்தானை கிளிக் செய்து, அடுத்த நிலைக்கு செல்லலாம்.
பிறகு 'Services' Tab இல் இருந்து 'Know Your Refund Status' ஐ கிளிக் செய்யவும்.www.incometax.gov.inwww.incometax.gov.in

இங்கு நீங்கள் தேர்வு செய்த வருமான வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான ரீஃபண்ட் ஸ்டேட்டஸை அறிந்துக் கொள்ளலாம்.

ரீஃபண்ட் ஸ்டேட்டஸை அறிய விரும்பும் ஆண்டினை தேர்வு செய்து, பிறகு 'Submit' பொத்தானை கிளிக் செய்யவும்.குறிப்பு: ஒருவேளை 31 மார்ச் 2023 அல்லது அதற்கு முந்தைய காலத்திற்கான ரீஃபண்ட் பெறும் பட்சத்தில், Protean (NSDL) இணையதளத்தில் கிளிக் செய்து, ரீஃபண்ட் ஸ்டேட்டசை சரிபார்க்கலாம்.
ரீஃபண்ட் பெறுதலில் ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருந்தால் வங்கி உதவி எண்ணை அழையுங்கள். (SBI உதவி எண் - 18004259760). உங்கள் கணக்கு எந்த வங்கியில் இருக்கிறதோ, அதன் கிளையைத் தொடர்பு கொள்ளலாம்.
ரீஃபண்ட் பெற வேண்டும் எனில், இ-ஃபைலிங் போர்ட்டலில் உங்கள் வாங்கி கணக்கு குறித்த தகவல்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். உங்கள் வாங்கி கணக்கு எண் மற்றும் அதன் விபரங்கள் சரியாக புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியம்.
உங்கள் வாங்கி கணக்கு தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதனை, www.incometax.gov.in இந்த இணையத்தில் நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம். இதைச் சரிபார்க்க நீங்கள் இ-ஃபைலிங் போர்ட்டலில் லாக்-இன் செய்து, 'Profile' பொத்தானை கிளிக் செய்யுங்கள். பிறகு, 'My Bank Account' பிரிவில், 'Revalidate/Add Bank Account' பொத்தானை கிளிக் செய்யவும்.

ரீஃபண்ட் பெற்றிருந்தால் உங்கள் ஸ்கிரீனில் இப்படி தெரியும்www.incometax.gov.in

ரீஃபண்ட் பகுதியளவு வழங்கப்பட்டிருந்தால் இப்படி தெரியும்www.incometax.gov.in

முழுமையான ரீஃபண்ட் பெற்றால்...www.incometax.gov.in

ரீஃபண்ட் தோல்வி அடைந்திருந்தால், இப்படி தெரியும்www.incometax.gov.inஉங்கள் பான் செயலற்ற (Inoperative) நிலையில் இருக்கும் பட்சத்தில் ரீஃபண்ட் பெற இயலாது.
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க கூறி, இப்படியான பாப்-அப் செய்தி வெளிப்படும்.www.incometax.gov.in

ரீஃபண்ட் பெற முடியாமல் போவதற்கான காரணங்கள்வங்கி கணக்கு 'ப்ரீ-வேலிடேட்' செய்யப்படாமல் இருந்தால் ரீஃபண்ட் தோல்வி அடையலாம்.
உங்கள் வங்கி கணக்கு நிச்சயம் 'ப்ரீ-வேலிடேட்' செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒருவேளை பான் கார்டு மற்றும் வங்கி கணக்கில் உங்கள் பெயர் சரியாக பொருந்தவில்லை எனில் ரீஃபண்ட் தோல்வியடைய வாய்ப்புள்ளது.
வங்கியின் IFSC குறியீடு தவறாக இருந்தால்.
உங்கள் கணக்கில் ITR Closed என குறிப்பிடப்பட்டிருக்கும் பட்சத்திலும் ரீஃபண்ட் தோல்வியடையலாம்.www.incometax.gov.in

ஒருவேளை ரீஃபண்ட் தோல்வி அடைந்தால், ரீஃபண்ட் பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை'Service' Tab பொத்தானை கிளிக் செய்யுங்கள். அதில் 'Refund Reissue' -ஐ தேர்வு செய்யுங்கள்.
பிறகு 'Create Refund Reissue' கோரிக்கையை கிளிக் செய்யவும்
ஒப்புகை எண்ணை (Acknowledgment Number) உள்ளிட்ட பிறகு, 'Continue' பொத்தானை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு, எந்த வங்கி கணக்கில் நீங்கள் ரீஃபண்ட் தொகை பெற விரும்புகிறீர்களோ, அதன் விபரங்களை ரீ-வேலிடேட் செய்ய வேண்டும்.
குறிப்பு: ஒருவேளை வேறு ஏதேனும் வங்கி கணக்கில் ரீஃபண்ட் தொகையை பெற விரும்பினால், நீங்கள் 'Add Bank Account' தேர்வை கிளிக் செய்து, தேவையான தகவல்களை அளிக்க வேண்டும். பிறகு அதை வேலிடேட் செய்யவும். ரீஃபண்ட் பெறவங்கி கணக்கை வேலிடேட் செய்ய வேண்டியது அவசியம்.
பிறகு, இணைக்கப்பட்ட வங்கி கணக்கை தேர்வு செய்து, சரிபார்ப்பு (verification) பொத்தானை கிளிக் செய்யவும்.
சரிபார்ப்பு முடிந்த பிறகு, ரீஃபண்ட் கோரிக்கை மீண்டும் சமர்ப்பிக்கப்படும்.

(ஆதாரம்: வருமான வரித்துறை)

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News