தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மாணவர்களின் ஆர்வமும் அரசு பள்ளிகளின் மீது பெற்றோர்களின் நாட்டமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின்படி பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து அனுமதி தர வேண்டும் என்றும் பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கையை EMIS இல் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment