Monday, July 29, 2024

தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்! _ கோல்டன் டிப்ஸ்



தங்க நகையின் மவுசு எப்போதும் நம் நாட்டில் குறையப்போவதில்லை. மொத்த இந்திய வீடுகளில் இருக்கும் தங்கத்தின் கையிருப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய ரூபாய் மதிப்பில் ஐம்பத்து நான்காயிரத்து நூற்றி எட்டு கோடியாகும் - ரூ 5,41,08,00,00,000!

இந்தியர்களுக்கு தங்கத்தின் மேல் இவ்வளவு மோகம் வரக்காரணம் மூன்று - தங்கம் அந்தஸ்த்தை பறைசாற்றுகிறது, அணிபவரை ஆடம்பரமாய் மிடுக்காய்க் காட்டுகிறது முக்கியமாக தங்கத்தை ஒரு அவசரகால சேமிப்பாக பார்க்கப்படுகிறது.

2008 இல் உலகமே கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியபோது, இந்தியர்கள் அந்த நெருக்கடியை அவ்வளவாக உணரவில்லை, காரணம் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பு, இதில் தங்கத்துக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.

சமீப காலமாக தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கவில்லையே, தங்கத்தை வாங்கிவைத்தால் அது பின்னாளில் பலன் தருமா? என்ற சந்தேகம் இருந்தாலும் தங்கத்தின் விலை சிறுகச் சிறுக உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த போக்கு நீண்டகால அடிப்படையில் தங்கத்தின் விலை அதிகரித்தே தீரும் எனக் காட்டுகிறது. அதனால், தங்க விலை மிதமிஞ்சாமல் சீராக இருக்கும்போதே திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளுக்கு தங்க நகைகளை வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது.

நம்பிக்கையான நகைக்கடையில் 916 ஹால் மார்க் நகைகளை வாங்குவதையே இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) வலியுறுத்துகிறது. தூய தங்கத்தை வைத்து நகைகள் செய்ய முடியாது, தங்கத்தோடு செம்பு போன்ற உலோகம் கலந்தே நகைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் 916 ஹால் மார்க் என்பது நகையில் 91.6 சதவீதம் தங்கம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. மீதி 8.4 சதவீதம் வேறு உலோகமாக இருக்கும், பெருவாரியான கடைகளில் இப்போதெல்லாம் இந்த 916 நகைகளே விற்கப்படுகின்றன. அதனால் நகை வாங்கயில், இந்த முத்திரை உள்ளதா, அன்றைய நாளில் 916 தங்கத்தின் மதிப்பு என்ன எனத்தெரிந்தே நகையை வாங்கவேண்டும்! இதனால் ஏமாறாமல் இருக்கலாம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News