Thursday, July 18, 2024

அக்டோபர் மாத திருப்பதி தரிசனத்திற்கு முன்பதிவு துவக்கம்!

அக்டோபர் மாதத்திற்கான திருப்பதி திருமலை தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு துவங்குகிறது.

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது . தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.


திருப்பதி செல்பவர்கள் உங்கள் முன்பதிவு டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாகவே சென்றாலும் கூட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், முன்பதிவு நேரத்தை விட ரொம்ப லேட்டாக போகாதீங்க. அப்புறமா உங்களோட டிக்கெட் ஸ்கேன் செய்யும் போது நேரமாயிடுச்சு என்று அனுமதி மறுக்கப்படலாம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சாமிதரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை காலை ஆன்லைனில் வெளியிடும் என்று திருப்பதி தேவஸ்தானம்அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை 18ம் தேதி காலை 10 மணி முதல் 20ம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் தோமாலை உட்பட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்று பிற்பகல் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News