Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 17, 2024

இந்தாண்டு ஆடி அமாவாசை எப்போது?; முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நேரம் எது?


பொதுவாக அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றத்தாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆண்டில் வரும் இந்த 3 அமாவாசை தினங்கள் ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது.

இந்த அமாவாசை தினங்கள் தமிழ் மாத நாட்காட்டி படி கணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த அமாவாசை தினங்கங்களில் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பர். அதிலும் மேல் குறிப்பிட்டபடி, அந்த 3 அமாவாசை தினங்களில் நீர் நிலைகள் சென்று திதி, தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது என்றும் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் என்றும் வந்து சேரும் என்பது ஐதீகம்.

அந்த வகையில், இந்தாண்டு ஆடி மாதம் தொடங்கி உள்ளது. இந்த மாதம் வரும் ஆடி அமாவாசை ஆடி மாதம் 19ஆம் தேதியான ஆகஸ்ட் 4ஆம் தேதியில் வருகிறது. அதோடு அமாவாசை திதி ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி மறுநாள் 4ஆம் தேதி மாலை 5.32 மணி வரை இருப்பதால், ஆகஸ்ட் 4ஆம் தேதி முழுவதும் நீங்கள் திதி கொடுக்கலாம்.

அருகில் உள்ள நீர், நிலைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கலாம். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்பதும் ஐதீகம் ஆகும்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment