புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிப்பவர்கள் மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதாவது புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் போது திருமணச் சான்று, மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் ரசீது மற்றும் ஆதார் எண் போன்றவை பதிவு செய்யப்பட வேண்டும். பின்னர் விண்ணப்பதாரரின் முகவரியில் உணவு வழங்கல் அதிகாரிகள் ஆய்வு செய்து ரேஷன் கார்டு பெறுவதற்கு தகுதியான நபர்கள் என்ற பட்சத்தில் ரேஷன் கார்டு வழங்க பரிந்துரை செய்வார்கள்.
ஆனால் தற்போது புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளிப்பவர்கள் மின் கணக்கீடு அட்டை, சொத்து வரி ரசீது ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஏனெனில்
மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் தமிழக அரசு வழங்கி வருவதை தொடர்ந்து, இந்த உதவித்தொகையை பெறுவதற்காக பலரும் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர் இதில் பல பேர் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனை தடுக்கும் நோக்கத்தில் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் தகுதியான நபர்களாக உள்ளார்களா?.. என்று உறுதி செய்யும் நோக்கத்துடன் மின் கணக்கீடு அட்டை, சொத்துவரி ரசீது ஆவணங்களை அதிகாரிகள் கேட்கின்றனர்.
மேலும் தனி வீட்டில் வசிப்பவர்கள் கேஸ் ரசீது கொடுத்தால் போதுமானதாகும் ஒப்புதல் அளிக்கப்பட்ட நபர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment