Thursday, July 25, 2024

உதவித்தொகையுடன் இந்தியன் வங்கியில் தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு



பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Apprenticeship

காலியிடங்கள்: 1500

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.12,000 - 15,000

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் தங்களது கல்வித் தகுதி குறித்த விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் www.indianbank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News