Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 9, 2024

பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்: பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

இம்மாதம் 11-ம் தேதி நடை பெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு 12-ம் தேதிக்குமாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகளுக்கு அவர்அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அட்டவணையின்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்துக்குள் மாறுவதற்கான கலந்தாய்வு ஜூலை 10-ம் தேதி நடத்தப்பட வேண்டும்.

விக்கிரவாண்டி தேர்தல்: ஆனால், அன்றைய தினம்விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதாலும், தேர்தல் பணியை மேற்கொள்ள ஆசிரியர்கள் அங்கு செல்ல இருப்பதாலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்துக்குள் மாறுவதற்கான கலந்தாய்வு விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் ஜூலை11-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும். இதர மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுபோல் ஜூலை 10-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.


மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதிக்குப்பதிலாக 12-ம் தேதி நடத்தப்படும். இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News