Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 27, 2024

தமிழ்நாடு அரசில் டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்கள்.. முழு விவரம்

தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 654 டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

எனவே தமிழ்நாட்டில் அரசு பணியில் சேர விரும்புவோர் இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நேர்முகத்தேர்வு இந்த பணிகளுக்கு இல்லை.. நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் வேலை கிடைக்கும்.

தமிழ்நாட்டில் அரசு பணியில் சேர விரும்போர் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 மற்றும் இந்து அறநிலையத்துறை, நகராட்சி துறை, கூட்டுறவுத்துறை, நீதிபதி உள்பட பல்வேறு அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளை எழுத வேண்டும். இதில் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு இல்லை.. நேரடியாக மதிப்பெண் அடிப்படையில் வேலை கிடைத்துவிடும். சான்றிதழ் சரிபார்ப்பு மட்டுமே இருக்கும். நன்றாக படித்தவர்கள் லஞ்சம் கொடுக்காமல் அரசு துறைகளில் வேலைகளில் எளிதாக சேர முடியும்.

அண்மையில் குரூப் 2 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடந்த 20ம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 654 டெக்னிக்கல் சர்வீஸ் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பினை ஜூலை 26ம் தேதியான இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, உதவிப் பொறியாளர், புவியியலாளர் , வேதியியலாளர், உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு தகுதியானவர்கள் ஜூலை 26ம் தேதி (இன்று) முதல் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு 654 பணி இடங்களுக்கு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு என இரண்டு வகையான தேர்வுகள் நடைபெறும். தாள் ஒன்று என்பது தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் தகுதியை உறுதி செய்யும் வகையில் தேர்வு இருக்கும். அக்டோபர் 26ம் தேதி அன்று தாள் ஒன்று தேர்வு நடைபெறும்.

தாள் இரண்டு தேர்வு வரும் அக்டோபர் 14 முதல் 23ஆம் தேதி வரை உதவிப் பொறியாளர், புவியியலாளர் , வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டாம் தாளில் வேளாண்மை, பயோ ஹெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, பிஜி தாவரவியல், தாவரவியல் (பிஎஸ்சி) உள்பட பல்வேறு பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது.

என்னென்ன பதவிகள்: உதவி என்ஜினியர் (சிவில்), வேளாண்மை அதிகாரி, உதவி இயக்குனர், திட்டமிடல் அதிகாரி, கெமிக்கல் அதிகாரி, புள்ளியில் அதிகாரி, ஜூனியர் மேனேஜர் உள்பட மொத்த 53 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வயது வரம்பு கல்வி தகுதி: அனைத்து பதவிகளுக்கும் 21 வயது நிறைவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் அதிகபட்ச வயது பொதுப்பிரிவுக்கு 32 ஆகும். எனினும் அரசு அறிவித்துள்ள சலுகைகள் படி, பெரும்பாலான பதவிகளுக்கு 60 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். முழு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment