மனிதனின் அத்தியாவசிய தேவைகளாக உள்ளது உண்ணவு உணவு, உடுத்த உடை மற்றும் இருப்பிடம். ஆனால் பெரும்பாலான மக்களால் இந்த அத்தியாவசிய தேவைகளை கூட பெறம் முடியாத நிலை உள்ளது.
அதிலும் குறிப்பாக வீடு கட்டுவது பலருக்கும் கனவாகவே உள்ளது. பொருளாதாரம் மற்றும் விலைவாசியின் காரணமாக பெரும்பாலான மக்களுக்கு சொந்த வீடு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இலவசமாக வீடுகளை கட்டி தருகிறது. இது என்ன திட்டம், எப்படி விண்ணப்பிப்பது மற்றும் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
வீடு இல்லாதவர்கள் மற்றும் வீடு கட்டுவோர் பயனடையும் வகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்தது. அதனை தொடர்ந்து இந்த திட்டம் மூலம் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரப்படுகிறது.
விண்ணப்பிக்க தகுதி என்ன?பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்கள் மற்றும் சொந்த வீடு கட்ட முடியாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வீடு இல்லாதவர்கள் மட்டுமன்றி, 2 அறைகளை கொண்ட வீடுகளில் வசிப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்கள் இந்த திட்டத்தில் வீடு கட்ட விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். சொந்த வீடு இருக்க கூடாது.
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயர், ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். அரசின் அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடையவர்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இந்த https://pmaymis.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி?முதலில் https://pmaymis.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Awaassoft என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு DATA ENTRY FOR AWAAS என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு உங்களது மாநிலம் மற்றும் மாவட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு உங்கள் பெயர், கடவுச்சொல், கேப்ட்ச்சா உள்ளிட்டவற்றை பதிவிட்டு உள்நுழையவும்.
பிறகு பயனாளிகள் பதிவு படிவத்தில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
அதன் பிறகு உங்களது வங்கி விவரங்களை பதிவிட வேண்டும்.
பிறகு மூன்றாவது பிரிவில் பயனாளிகளின் ஒருங்கிணைப்பு விவரங்களை பதிவிட வேண்டும்.
நான்காவது பிரிவில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தால் நிரப்பட்ட விவரங்கள் தொடர்பான தகவலை நிரப்பி சமர்பிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பித்த பிறகு பயனாளிகளின் பட்டியலை rhreporting.nic.in இணையதளத்தில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment