இந்திய வருமான வரி சட்டத்தின் படி தனிநபருக்கு நான்கு வருமான வரி ரிட்டன் (ITR) படிவங்கள் பொருந்தும். ஆனால் அது யாருக்கு எப்படி பொருந்தும், எதற்காக எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு கட்டாயம் அனைவருக்கும் வேண்டும்.
ஜூலை 31, 2024 ஆம் தேதிக்குள் 2023-24 நிதியாண்டிற்கான அல்லது மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான வருமான வரி கணக்கு அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய வேண்டும்.
ITR 1 படிவம் : 50 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் உள்ள ஒரு சாதாரண குடியுரிமை தனிநபர் இதை தாக்கல் செய்யலாம், இந்த படிவம் HUF அதாவது ஹிந்து கூட்டு குடும்பம் சேர்க்கப்படாது. ஐடிஆர் 1 அறிக்கையில் சம்பளம் அல்லது ஓய்வூதியம், சொத்தில் இருந்து கிடைக்கும் வருமானம், வங்கிக் கணக்கிலிருந்து வட்டி போன்ற பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம், கணக்கில் காட்டப்பட வேண்டும்.
ITR 2 படிவம் : மொத்த வருடாந்திர வருமானம் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள தனிநபர்கள் மற்றும் HUF குடும்பங்களுக்கு இந்த படிவத்தை தேர்வு செய்யலாம்.
ITR 3 படிவம் : வணிகம் அல்லது தொழிலில் இருந்து வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் HUF அல்லது ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் ஆக இருக்கும் தனிநபர் ITR-3 படிவத்தை தாக்கல் செய்யலாம்.
ITR 4 படிவம் : சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் எளிய வரி தாக்கல் படிவமாகும். இதை தனிநபர்கள், HUF, நிறுவனங்களும் பயன்படுத்தலாம். இதை இணையத்தின் வாயிலாகவும் தாக்கல் செய்யலாம்.
ITR 5 படிவம் : இது LLP மற்றும் வணிக அமைப்புகள் பயன்படுத்துவது.
ITR 6 படிவம் : இது நிறுவனங்களால் மட்டுமே தாக்கல் செய்யப்படுவது.
ITR 7 படிவம் : இதுவும் LLP மற்றும் வணிக அமைப்புகள் பயன்படுத்துவது.
No comments:
Post a Comment