Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் உள்ளன. இவை நடப்பு கல்வியாண்டு (2024-25) இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 16 ஆயிரம் மாணவர்கள் வரை விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கிடையே பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று 2-வது முறையாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஏற்கெனவே விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது குறிப்பிடத்தகக்து.
IMPORTANT LINKS
Friday, August 2, 2024
Home
விண்ணப்பிக்க
3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.10 வரை நீட்டிப்பு
3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.10 வரை நீட்டிப்பு
Tags
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க
Tags
விண்ணப்பிக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment