Thursday, August 1, 2024

இன்று முதல் அமுலுக்கு வரும் பாஸ்டேக் புதிய விதிமுறை..!


5 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஃபாஸ்டேக்குகள் மாற்றப்பட வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட FASTags க்கு KYC புதுப்பிக்கப்பட வேண்டும்.

வாகன பதிவு எண் மற்றும் சேசிஸ் எண் ஆகியவை FASTag உடன் இணைக்கப்பட வேண்டும்.

புதிய வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் பதிவு எண்ணை புதுப்பிக்கவும்.

FASTag வழங்குநர்கள் தங்கள் தரவுத்தளங்களை சரிபார்க்க வேண்டும்.

காரின் முன் மற்றும் பக்கவாட்டின் தெளிவான புகைப்படங்களை பதிவேற்றவும்.

ஃபாஸ்டேக் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.

புதிய வழிகாட்டுதலை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ளது. இதன்படி ஃபாஸ்டாக்கான KYC சரிபார்ப்பை செய்திருக்க வேண்டும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல விதிகள் இருந்தாலும், ஃபாஸ்டாக்கான, இந்த புதிய கேஒய்சி விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டாக் புதிய விதிகளின்படி, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சி முடிக்கப்பட வேண்டும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வழங்கப்பட்ட அனைத்து ஃபாஸ்டாக்களுக்கும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சியை முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்த செயல்முறை துவங்குகிறது. NPCI வழிகாட்டுதல்களின்படி ஃபாஸ்டாக் வாடிக்கையாளர்கள் KYC புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளின் படி, 5 ஆண்டுகள் பழமையான ஃபாஸ்டாக்குகள் மாற்ற வேண்டும். KYC புதுப்பிப்பு, வாகன பதிவு எண் மற்றும் சேஸ் எண்ணை ஃபாஸ்டாக்குடன் இணைத்தல். 90 நாட்களுக்குள் புதிய வாகனம் வாங்கியவர்கள் பதிவு எண்ணை புதுப்பித்தல். ஃபாஸ்டாக்குடன் மொபைல் எண்ணை இணைத்தல். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சியை நிறைவு செய்தல் போன்றவற்றை செய்து முடிக்க வேண்டும்.

விரைவில் ஃபாஸ்டாக்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவிருப்பதால், வாகன உரிமையாளர்கள், ஃபாஸ்டாக் விவரங்களை புதுப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பழைய ஃபாஸ்டாக்குகளை மாற்றுதல் KYC விவரங்களை சரிபார்த்தல் மற்றும் வாகன விவரங்களை இணைத்தல் போன்றவற்றை முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News