ஏற்கெனவே கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை பயன்படுத்தி பலரது வாழ்க்கை சிக்கலில் இருக்கிறது. இருந்தாலும் நடுத்தர மக்களின் பெரும் வாழ்வாதாரமாக இருந்து வருவது இது போன்ற கிரெடிட் கார்டுகள் தான்.
சரியான திட்டமிடலுடன் பயன்படுத்தினால் இவை பெரும் வரப்பிரசாதமாகவே இருக்கின்றன. பயன்படுத்த தெரியாமல் மாட்டிக் கொண்டால் கழுத்தை இறுக்கும் சாத்தானாக மாறி விடுகின்றன.
இந்நிலையில், பல வங்கிகள் அவ்வப்போது கிரெடிட் கார்டுகளின் நடைமுறைகளை மாற்றி வருகின்றன. இந்தியாவில் செயல்பட்டு வரும் முண்ணனி வங்கி நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி. இந்தியா முழுவதும் எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை ஹெச்டிஎஃப்சி வங்கி வழங்கி வருகிறது. இந்நிலையில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளில் இன்று அதிகாலை முதல் முக்கிய மாற்றங்களை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று முதல் ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட், காசோலை, மொபிக்விக், ஃப்ரீசார்ஜ் போன்ற தளங்களில் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரூ15000க்கு மேல் எரிபொருள் கட்டணம் கிரெடிட் கார்டுகளில் பயன்படுத்தி இருந்தால் ஒரு சதவீதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HDFC Tata New Infinity மற்றும் Tata New Plus கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், Tata New UPI ஐடி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இப்போது 1.5 சதவீதம் திரும்ப பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால், இனி உஷாராக பயன்படுத்துங்க. வழக்கம் போல் அஜாக்கிரதையாக இருக்காதீங்க. இந்த 1 சதவீதம் என்பது பெரும் பணமாக வட்டி போட்டு, வட்டிக்கு குட்டிப் போட்டு உயர்ந்து நிற்கும்.
No comments:
Post a Comment