தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்-2024-26 ஆகிய அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 25 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகள் கால அளவு அடிப்படையில் இந்த வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி முழு விவரங்களை பற்றி பார்ப்போம்.
தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், "திறன்மிகு இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தி நிர்வாகச் செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்திட, முக்கியத்துவம் வாய்ந்த "தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் -2024-26" என்ற திட்டத்திற்கு கீழ்கண்ட விவரங்களின்படி, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத்தின் பெயர் : தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் -2024-26
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை: 25
வயது வரம்பு: 06.08.2024 அன்று நிலவரப்படி, 22 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு: ஆதிதிராவிடர்/பழங்குடியினர்-35 வயது வரை. பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர்-33 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணி காலம் : 2 ஆண்டுகள்
மாதாந்திர ஊதியம்: ரூ.65000+ ரூ.10000 (கூடுதல் படி)
கல்வித்தகுதி: தொழிற்கல்விப் படிப்புகளில் இளங்கலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி(பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை கால்நடை அறிவியல்) அல்லது கலை/அறிவியலில் முதுகலைப் பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி.
தமிழ் மொழி பயன்பாட்டுத் திறன் கட்டாயமானது.
தேர்வு செயல்முறை: முதற்கட்ட தேர்வு (கணிணி அடிப்படையிலானது), விரிவான தேர்வு (எழுத்துத்தேர்வு) மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியிடம்: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
விண்ணப்பம் : இதற்கு 06.08.2024 முதல் விண்ணப்பிக்கலாம். மற்றும் இணையவழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 26.08.2024 ஆகும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. மேலும் விவரங்களுக்கு மற்றும் இணைய வழி விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரிகள்: www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp ஆகிய இணையவழி முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையவழி அல்லாத வேறு முறைகளில் விண்ணப்பங்கள் ஏற்றுக்ககொள்ளப்பட மாட்டாது" இவ்வாறு சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment