Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 13, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு எழுதப்போறீங்களா.. இதை தெரிஞ்சுக்கிட்டு போங்க !

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2 A பதவிகளுக்கான ஒருங்கிணைந்த முதநிலை தேர்வு தேர்வு 14.09.2024 அன்று நடைபெற இருக்கிறது.

குரூப் 2 மற்றும் குரூப் 2 என மொத்தம் 2327 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூன் 20 அன்று வெளியான நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2A பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு செப்டம்பர் 14 சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இதற்கு சுமார் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர், வனவர், உதவி பிரிவு அலுவலர் என மொத்தம் 57 குரூப் 2 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

அதேபோல முழு நேர விடுதிக்காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், இளநிலை கணக்கர், விரிவாக்க அலுவலகர் உள்ளிட்ட 1820 குரூப் 2A பணியிடங்கள் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்நிலையில் இந்த தேர்வுக்கு செல்லும் முன்னர் தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை சொல்கிறோம் .

தேர்வு நேரம்.

மூன்று மணி நேரம் நடக்கும் இந்த தேர்வானது 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறும். ஆனால் தேர்வர்கள் 8.30மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றாக வேண்டும். தாமதமாக வரும் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்தப் பின்னரே, தேர்வர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாள் முற்பகல் 9.00 மணிக்கு வழங்கப்படும்.

OMR விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் முற்பகல் 9.00 மணிக்கு வழங்கப்படும்.9.15 மணிக்கு தேர்வர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும். தேர்வு 12.30 க்கு முடிந்தாலும், 12.45 மணி வரை தாங்கள் உள்ளிட்ட பதிலை சரிபார்க்கவும் எண்ணி பதிவு செய்யவும் கூடுதல் அவகாசம் வழங்கப்படும். அதற்குப் பின்னரே தேர்வர்கள் தேர்வு அறையை விட்டு வெளியே வரலாம்.

என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்?

தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்)

ஆதார் அட்டை / கடவுச்சீட்டு(PASSPORT) / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் (PAN CARD) அட்டை / வாக்காளர் அடையாள அட்டையின் அசல் / நகல் என்று ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். பதில்களைக் குறிக்க கருப்பு பந்து முனை பேனா கட்டாயம் .

: TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இதுபோக எந்த பொருளையும் தேர்வரைக்கும் எடுத்துச் சொல்லக்கூடாது. சாதாரண கடிகாரத்தை அணிந்து செல்லலாம். ஆனால் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் டிவைஸ்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது. மீறி எடுத்துச் சென்றால் கடுமையாக தண்டிக்கப்படுவர்.

பதில் எழுதும் முறை

ஒவ்வொரு கேள்விக்கும் A, B, C, D என்று நான்கு ஆப்சன்கள் வழங்கப்பட்டு இருக்கும். அதில் எது சரியானது என்று உங்களுக்கு தோன்றுகிறதோ அதை கருப்பு பந்து முனை பேனாவில் குறிக்க வேண்டும்.. சரியான பதில் எது என்று தெரியவில்லை என்றால் பதில் தெரியவில்லை என்பதற்காக கொடுக்கப்படும் E என்பதை குறிக்க வேண்டும்.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் குறிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு குறிக்கப்படாமல் இருந்தால் கூட விடைத்தாள் செல்லாததாக மாறிவிடும். பதில் எண்ணிக்கை விடைத்தாளில் மூன்று முதல் நான்கு பிரிவுகளாக பதில்களை குறிக்கும் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வரிசையில் கீழும் எத்தனை A, B, C, D, E என்பதை குறிக்க வேண்டும்.

அதோடு விடைத்தாளில் இடதுபுறத்தில் உள்ள கட்டத்திலும் ஒட்டுமொத்த கணக்கை குறிப்பிட வேண்டும். மொத்தமாக அனைத்தையும் கூட்டும் பொழுது 200 என்று வரவேண்டும். அப்பொழுது தான் விடைத்தாள் செல்லுபடி ஆனதாக எடுத்துக் கொள்ளப்படும்.

வாழ்த்துக்கள்

இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் படித்ததை நிதானமாக நினைவு படுத்திக் கொண்டு தேர்வை எழுதுங்கள். தேர்வறையில் அவசரமோ பதற்றமோ வேண்டாம். படித்ததை நினைவுக்கு கொண்டு வந்து எழுதினாலே பாஸ் ஆகி விடலாம்.. இன்று தேர்வு எழுதும் அனைத்து தேர்வர்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News