Tuesday, September 24, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2024

அநுர குமார திஸ்ஸநாயக



திருக்குறள்: 

பால் பொருட்பால்

அதிகாரம் :நட்பு ஆராய்தல்

குறள் எண்:792

ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

பொருள்: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கிவிடும்.

பழமொழி :

தவளையும் தன் வாயால் கெடும். 

 Know when to keep quiet.

இரண்டொழுக்க பண்புகள் :  

 * தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                              

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வது தான் உங்கள் வளர்ச்சியின் அடையாளம். ----காமராஜர்

பொது அறிவு : 

1. இலங்கையின் புதிய ஜனாதிபதி யார்?

விடை : அநுர குமார திஸ்ஸநாயக.

2. இந்தியாவின் மிக பெரிய நதி எது.?

விடை : கங்கை 

English words & meanings :

 aching-வழியேற்படுத்தும்,

 arduous- கடினமான

வேளாண்மையும் வாழ்வும் : 

இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்.

செப்டம்பர் 24

2014 – மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது

நீதிக்கதை

 கஷ்டம் 


பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா  தன்னுடைய முதுமையின் காரணமாக ஒரு நாள் உடல் வலியால் அவதிப்பட்டபோது தன்னுடைய மருத்துவருக்கு போன் செய்தார்.


 தனக்கு உடலின் வலி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், விரைவாக தனது வீட்டிற்கு வரும்படியும் அழைத்தார் 


 மருத்துவர், தனது மருத்துவமனையில் நிறைய நோயாளிகள் இருப்பதாகவும் அதனால் தன்னால் தற்போது வர இயலாது என்றும் கூறினார் 

மேலும், பெர்னாட்ஷாவை தன்னுடைய மருத்துவமனைக்கு வருமாறு  கூறினார்


 அதற்கு பெர்னாட்ஷா "தன்னால் எழுந்து நிற்க கூட முடியவில்லை, தனக்கு ஒரு காபி கூட தயாரிக்க இயலவில்லை,  சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை" என்று கூறினார்.


 எனவே மருத்துவரும்  வீட்டிற்கு வந்தார். வீட்டின் மேல் மாடியில் இருந்த பெர்னாட்ஷாவை பார்க்க மாடிப்படி ஏறி வந்து சேர்ந்தார். முதியவர் ஆன மருத்துவருக்கு மூச்சிரைக்க,நெஞ்சை பிடித்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.


 அதை பார்த்த பெர்னாட்ஷா உடனடியாக மருத்துவதற்கு காப்பி தயாரித்துக் கொண்டு வந்து பருக கூறினார்.


காபியை பருகிய  மருத்துவர் தன்னுடைய பில் புத்தகத்தை எடுத்து 300 ரூபாய்க்கு பில் எழுதி பெர்னாட்ஷாவிடம் கொடுத்தார்.


 அதைப் பார்த்த பெர்னாட்ஷாவிடம்  "எனக்கு மருத்துவம் பார்க்க வந்த தங்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட நான்தான் பணிவிடை செய்தேன் தற்போது எனக்கே பில்  கொடுக்கிறீர்களா? என்று கேட்டார்.


 அதற்கு மருத்துவர் தங்களுக்கு வைத்தியம் பார்த்ததற்கான தான் இந்த தொகை என்றார்.

மேலும் மருத்துவர் தொடர்ந்து  "போனில் தங்களால் என்னென்ன செய்ய இயலாது என்று கூறினீர்களோ அதெல்லாம் தற்போது செய்தீர்கள் அல்லவா? தங்களால் நடக்க முடியாது என்றீர்கள் எனக்காக நடந்து சென்றீர்கள். தங்களால் காபிக்கு போட்டு குடிக்க  முடியவில்லை என்றீர்கள்.ஆனால் எனக்காக காபி தயாரித்து கொண்டு வந்தீர்கள் மேலும் சிறிது நேரம்  நிற்க முடியவில்லை என்றீர்கள் ஆனால் தற்போது  அரை மணி நேரமாக நின்று கொண்டு தான் இருக்கிறீர்கள் என்று கூறினார்.


மேலும் மருத்துவர்,"அப்போது தங்களுடைய கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள் உங்களால் முடியவில்லை தற்போது என்னுடைய கஷ்டத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய கஷ்டம் குறைந்து விட்டது" என்றார்.  மேலும் மருத்துவர்

இன்றைய செய்திகள்

24.09.2024

* மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வங்கி சார்பில் ஆயுள் காப்பீட்டுதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

* இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினாவில் அக்டோபர் 6-ம் தேதி பிரம்மாண்ட விமான சாகச காட்சி நடைபெற உள்ளது.

* பண்டிகைக் காலம் நெருங்கி வருகிற நிலையில், ரயில்களில் டிக்கெட் சோதனைக்கு என்று சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவு.

* இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திஸ்ஸநாயக

* கலப்பு தற்காப்பு கலை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங்.

* நியூசிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி: பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக புகார்.

Today's Headlines

* The bank has introduced a life insurance scheme for the employees of the Municipal Transport Corporation. 

* Light tremors were felt in Tirunelveli and Tenkasi districts along the Western Ghats. 

* To celebrate the 92nd anniversary of the Indian Air Force, a grand air show will be held at the Chennai Marina on October 6. 

* The festive season is approaching Meanwhile, the Ministry of Railways has ordered the formation of a special committee to check tickets in trains. 

* Anura Kumara Dissanayake was sworn in as the 9th President of Sri Lanka.

 * Sangram Singh is an Indian wrestler who  won the mixed martial arts competition. 

* New Zealand women's team fined by ICC for taking too long to bowl.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News