Thursday, September 26, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2024

திரு. மன்மோகன் சிங்

திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம் :நட்பு ஆராய்தல்

குறள் எண்:794

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

பொருள் :உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ள வேண்டும்.

பழமொழி :

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. 

 Don't measure the worth of a person by their size.

இரண்டொழுக்க பண்புகள் :  

 * தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                              

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

நேர்மறை எண்ணங்களே சாதனைக்கு வழிகாட்டும் ---ஹெலன் கெல்லர்

பொது அறிவு : 

1. கீரின்விச் கோட்டிற்கு மேற்கே செல்லச்செல்ல

விடை: நேரம் குறையும். 

 2. நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி

விடை: தீவு

English words & meanings :

 burning-எரித்தல்,

 caustic-நாசமாக்குகிற

வேளாண்மையும் வாழ்வும் : 

மடையர்கள்*
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை"

செப்டம்பர் 26

மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்

மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது

நீதிக்கதை

 விதியை மாற்றி அமைக்கலாம்


ஒருமுறை ஒரு ராஜா பெரிய ராணுவப்படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார் எப்படியும் இந்த போரில் தாம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.


 ஆனால் அந்தப் படை வீரர்களோ பெரும் சந்தேகத்துடனே இருந்தார்கள்.  மேலும் சோர்ந்து போய், நம்பிக்கையற்று  இருந்தார்கள். 


 அதனால் அந்த ராஜா தனது  தனது வீரர்களுக்கு நம்பிக்கையூட்ட,தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க ஒரு ஜென் துறவியை பார்க்க  புறப்பட்டார்.


அப்போது துறவி ராஜாவிடம் ஒரு யோசனை கூறினார். அதேபோல் ராஜாவும் செய்தார். 


அது என்னவென்றால், அந்த ராஜா போருக்கு செல்லும் வழியில் உள்ள கோவிலில் பூஜை செய்துவிட்டு  ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களிடம் காண்பித்து "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன் தலை விழுந்தால் நாம் போரில் ஜெயிப்போம் இல்லையெனில் தோற்போம்" என்று துறவி கூறியதை படைவீரர்களிடம் கூறினார்.


"நம் தலைவிதி இந்த  நாணயத்தை பொறு த்து அமையட்டும்" என்று மன்னர் கூறியபடி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் ஆர்வத்துடன் நாணயத்தை பார்த்திருந்தனர்.


தலை விழுந்தது. அந்த வீரர்கள் மிகவும் சந்தோஷத்துடன் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் போர்க்களத்தை நோக்கி புறப்பட்டனர்.


போர்க்களத்தில் வெற்றியும் பெற்றனர். அப்போது துணை தளபதி அவர்கள் "பார்த்தீர்களா!மன்னா  நாம் தான் வெற்றி பெற்று பெறுவோம் என்று இருக்கிறது. நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம். விதியை யாராலும் மாற்ற முடியாது" என்று கூறினார். 


அப்போது மன்னரோ, தன்னிடம் இருந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார். இதைக் கொண்டே துறவி கூறியபடி,தாம் தம் படைவீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்ததாக

விளக்கினார்.


 நீதி: நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் முடிக்கலாம்.விதியையும்  மாற்றி அமைக்கலாம்.

இன்றைய செய்திகள்

26.09.2024

*50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை உருவாக்க இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்.  

 * அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் , காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கும்.

*அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து, ஆண்டுதோறும் 200 பேருக்கு சிறப்பு பயிற்சி வழங்க ₹12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியீடு!

 *மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் முதல்கட்ட வகுப்புகள் நடத்தப்படும்.

* ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!

* இந்திய விமானப் படை துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் எஸ்.பி. தார்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர்  ஊக்கத் தொகை வழங்கி கவுரவிப்பு.

* ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து ; ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி.

* ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்.

Today's Headlines

* Chief Minister M. K. Stalin's said the government's target is to create jobs for 50 lakh youth. 

* While the quarterly examination for classes 1 to 12 is going on in government, government-aided and private schools, an announcement has been made regarding the extension of the quarterly vacation. Schools will re open on October 7. 

*Focusing on the fact that disabled persons should be selected in large numbers in government competitive examinations,₹12.90 lakh is allotted to provide special training to 200 people every year. 

 * First Stage classes will be held in the SI  Higher Secondary School for the Deaf in Mylapore.

* India is Asia's 3rd most powerful country: Loewy Ratings Announces!! 

* Air Marshal S.P. Darkar is appointed as the Deputy Commander of the Indian Air Force. 

* Those who won the Medal at the Paris  CM Stalin has awarded the winners with incentives.

*India won the men's doubles co-champion title at the Hangzhou Open tennis tournament. 

*ISL football; Punjab won by defeating Hyderabad.

* ICC Test rankings: Ashwin continues at number one.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News