Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 18, 2024

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி தலைவர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் எஸ்.கே பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் பிரசிடென்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு மையத்தை ஆய்வு செய்த பின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைப்பெற்று வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர நாட்காட்டியில் இந்த ஆண்டு 10 தேர்வுகள் நடத்த திட்டமிட்டோம். 8 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டுக்குள் திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளையும் நடத்த வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 10,315 பேருக்கு டிஎன்பிஎஸ்சி வாயிலாக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பத்தாயிரம் பேர் வரை வேலை வாய்ப்பு கிடைக்க தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

விடைத்தாள்களை திருத்த கூடுதல் பயிற்சி பெற்ற நிபுணர்கள் கூடுதல் ஸ்கேனர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குரூப் 4 முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.

1 comment:

Popular Feed

Recent Story

Featured News